நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக அம்பரப்பர் மலையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக அம்பரப்பர் மலையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக தேனி அம்பரம்பர் மலையில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்

தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் இருக்கும் அம்பரப்பர் மலைப்பகுதியில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு, மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறை சமீபத்தில் தனது முழு அனுமதியை வழங்கியது. நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராக நடத்தப்பட்ட மக்கள் போராட்டங்களின் விளைவாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த, ஆய்வுக்கூடம் அமைக்கும் பணியானது இனி எந்தவித சுணக்கமும் இல்லாமல் தீவிரமடையும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்தததற்கு தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்து வருகின்றனர். 

இந்தநிலையில், நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ள பொட்டிபுரம் அம்பரப்பர் மலைப்பகுதியில் அந்த திட்டத்துக்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர். நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராகவும், மத்திய அரசைக் கண்டித்தும் அவர்கள் கோஷமிட்டனர். அந்தப் பகுதியில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தரராஜன், இயக்குனர் கெளதமன், சுப.உதயகுமார் ஆகியோர் இன்று ஆய்வு நடத்த இருக்கிறார்கள். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!