வெளியிடப்பட்ட நேரம்: 18:00 (01/04/2018)

கடைசி தொடர்பு:18:00 (01/04/2018)

'காப்போம் காவிரியை' - சென்னையில் அமைதிப் பேரணிக்காகக் கூடிய இளைஞர்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி `Rally for Cauvery' என்ற பெயரில் சென்னை எழும்பூரில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பேரணி நடத்தினர்.

'காப்போம் காவிரியை' - சென்னையில் அமைதிப் பேரணிக்காகக் கூடிய இளைஞர்கள்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி `Rally for Kavery' என்ற பெயரில் சென்னை எழும்பூரில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பேரணி நடத்தினர். 

காவிரி மேலாண்மை வாரியம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மெரினா கடற்கரையில், ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பிறகு போராட்டம் நடத்தத் தடை விதிக்கப்பட்டிருந்த நிலையிலும், நேற்று 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள், குடும்பத்துடன்கூடி மத்திய அரசுக்கு எதிராகவும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரியும், கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பின், அங்கு விரைந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

பேரணி

இந்த நிலையில், தமிழகத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதில், ஒரு பகுதியாக போலீஸாரின் அனுமதியுடன் சென்னை, எழும்பூர் ராஜராத்தினம் மைதானத்தில் இருந்து பொதுமக்கள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்ககோரி, பேரணியாகச் சென்றனர். `Rally for Kavery' என்ற பெயரில் இந்த பேரணி நடந்தது. இதில், நாம் தமிழர் கட்சி, ஆம் ஆத்மி கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டுள்ளனர். இந்தப் பேரணியில், சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர். இந்தப் பேரணியில் `காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திடு,  காப்போம் காவிரியை ,விவசாயிகளை வதைக்காதே' உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியாறு சிறுவர்கள் சென்றனர். பேரணி முடிவில் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தவும் அந்த அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.