கோத்தகரி கேத்தரின் நீர்வீழ்ச்சியில் வெளியிடப்பட்ட ஆவணப்படம்! | Documentary released at Kothagiri Catherine Waterfalls

வெளியிடப்பட்ட நேரம்: 22:30 (01/04/2018)

கடைசி தொடர்பு:22:30 (01/04/2018)

கோத்தகரி கேத்தரின் நீர்வீழ்ச்சியில் வெளியிடப்பட்ட ஆவணப்படம்!

நீர்க்குடம் ஆவணப்படம் வெளியீடு, அரவேணு கேத்தரின் நீர்வீழ்ச்சியில் நடைபெற்றது.

நீர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட நீர்க்குடம் என்ற ஆவணப்படம் கோத்தகிரி கேத்தரின் அருவியில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. 

நீர்க்குடம் ஆவணப் படம் வெளியீடு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் ஆண்டு முழுவதும் வற்றாமல் ஓடிக்கொண்டிருக்கும் அருவி கேத்தரின் என்ற பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது. கோடைகாலங்களில் அப்பகுதியில் உள்ள நீரோடை வற்றினாலும், இந்த அருவி மட்டும் வற்றுவதேயில்லை. காரணம் அருவியின் இருபுறமும் எஞ்சியிருக்கும் மரங்கள், காடுகள், சதுப்பு நிலங்கள், புல்வெளிகள் இவைகள்தாம் . நீர்க்குடம் ஆவணப்படம் படப்பிடிப்பும் அங்குதான் தொடங்கப்பட்டது. ஆகவே நீருக்குள் நின்றபடி, அருவியின் சாரலில் நனைந்தபடி, இயற்கை அன்னையின் காலடியில் நீர்குடம் ஆவணப்படம் வெளியிடப்பட்டது.

அருவியைச் சுற்றியுள்ள இடங்களை தூய்மைப்படுத்தும் பணிகளும், நீலகிரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்குச் சூழலியல் விழிப்புணர்வு குறித்த துண்டு பிரசுரங்கள் அளிக்கவும், கலந்துரையாடல்கள், பள்ளி மாணவர்களது உரை என ஆவணப்பட அறிமுக விழாவுக்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள், சுற்றுலாப் பயணிகள், சூழலியலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். 

இந்தநிகழ்ச்சியில், `எதிர்கால தலைமுறைக்கு சேர்க்க வேண்டிய செய்தியை முன்னெடுத்து செல்ல வேண்டியது நீங்கள்தான். நீரின்றி அமையாது உலகு’ என்ற தலைப்பில் அரசுப் பள்ளி மாணவி பாரதி உரையாற்றினார். கேசலாட பள்ளி மாணவர்கள் நீர்க்குடம் ஆவணப்படத்தின் முதல் டி.வி.டியைப் பெற்றுக்கொண்டனர். ஆசிரியர்கள் ஜெயசீலன், ஆனந்குமார், வசந்த்குமார், நல்லமுத்து ஆகியோர் வாழ்த்துரை வழங்க, நிகழ்ச்சியின் நிறைவாக நீர்க்குடம் ஆவணப் படத்தின் இயக்குநர் தவமுதல்வன் ஏற்புரையாற்றினார்.  

நீங்க எப்படி பீல் பண்றீங்க