வெளியிடப்பட்ட நேரம்: 01:30 (02/04/2018)

கடைசி தொடர்பு:01:30 (02/04/2018)

மீனாட்சியம்மன் கோயில் நடை இன்று முழுவதும் சாத்தப்படுகிறது..!

மீனாட்சியம்மன் கோயில் நடை,இன்று காலை ஐந்து மணி முதல் இரவு 11 மணி வரை சாத்தப்படும் என்று கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மீனாட்சி அம்மன் திருக்கோயில் இன்று காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை முழுவதும் மூடப்பட்டிருக்கும். பக்தர்கள், சுற்றுலாப் பயணிகளுக்கு உள்ளே அனுமதி இல்லை. திருப்பரங்குன்றம் திருக்கல்யாண நிகழ்ச்சிக்கு சுவாமியும் அம்மனும் கோயிலிலிருந்து கிளம்புவதால் காலை ஐந்து மணி  முதல் இரவு 11 மணி வரை நடை சாற்றப்பட்டிருக்கும். 

கடந்த ஆண்டுகளில் பங்குனித்திருவிழாவின்போது கோயிலில் சுவாமி சந்நிதி அம்மன் சன்னிதி நடை சாற்றப்பட்டிருந்தாலும் ஆயிரங்கால் மண்டபம் உட்பட பல  பகுதிகளுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. முன் கோயிலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டதாலும் ஆயிரங்கால் மண்டபப் பகுதி  மூடப்பட்டுள்ளதால் நாளை அதிகாலை சுவாமி புறப்பாட்டுக்கு பிறகு இரவு திரும்பும் வரை கோயில் முழுவதும் மூடப்பட்டிருக்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க