வெளியிடப்பட்ட நேரம்: 05:13 (02/04/2018)

கடைசி தொடர்பு:10:39 (02/04/2018)

ஒரு குரங்கால் பிறந்து 16 நாளேயான குழந்தைக்கு ஏற்பட்ட சோகம்!

கடந்த சனிக்கிழமை அன்று, பிறந்து 16 நாள் ஆன குழந்தையைத் தாயிடமிருந்து ஒரு குரங்கு பறித்துச் சென்று ஓடிவிட்டது. தீவிர தேடலுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை காலை அங்கிருக்கும் ஒரு கிணற்றுக்குள் அந்தக் குழந்தை உயிரிழந்தபடி மிதந்துகொண்டிருந்தது. இந்தச் சம்பவம் அங்கிருப்பவர்கவளை ஆழ்ந்த சோகத்தில் தள்ளியுள்ளது.

குரங்கு

ஓடிசா மாநிலம் கட்டாக் மாவடத்தைச் சேர்ந்த ஒரு கிராமத்தில் தன் தாய்க்கு பக்கத்தில் அவரது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தது. திடீரென எதிர்பாராத விதமாக வீட்டுக்குள் புகுந்த ஒரு குரங்கு, பதினாறு நாள் வயதான அக்குழந்தையை தூக்கி ஓடிவிட்டது. இதைக் கண்டுப் பதற்றமடைந்த குழந்தையின் தாய் அங்கிருக்கும் மக்களிடமும் அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளார். தீயணைப்புப் படையினர், காவல் துறை அதிகாரிகள் என 30 பேர் கொண்டு தனிப்படை அமைத்து குழந்தையை தீவிரமாகத் தேடிவந்துள்ளனர். அந்தப் பகுதி முழுவதும் அடர்த்தியான காட்டுப் பகுதி என்பதால் தேடுதலில் சற்று சுணக்கம் ஏற்பட்டுள்ளது. சனிக்கிழமை முழுவதும் தேடியும் குழந்தைக் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை ஒரு கிணற்றுக்குள் அந்தக் குழந்தை உயிரிழந்த நிலையில் மிதந்துகொண்டிருந்தது. அக்குழந்தையை மீட்டெடுத்து அருகில் இருந்த மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் அங்கிருக்கும் மக்களை ஆழ்ந்த சோகத்தில் தள்ளியுள்ளது. அங்கு குரங்கு நடமாட்டம் அதிகமாக இருப்பதால், தொடர்ந்து இதேபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. அதேபோல், நிறையக் குழந்தைகள் தாக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.