காஷ்மீரில் 13 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை; 3 ராணுவத்தினரும் பலி!

ஜம்மு-காஷ்மீரின் அனந்தநாக் மற்றும் ஷோபியான் மாவட்டங்களில், நேற்று நிகழ்ந்த மூன்று வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களில் 13 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர்கள் 3 பேரும், பொதுமக்கள் தரப்பில் 4 பேரும் உயிரிழந்திருப்பதாக பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்தனர். போலீஸார், சி.ஆர்.பி.எஃப் மற்றும் ராணுவத்தினர் சிலருக்கு காயம் ஏற்பட்டதாக அவர்கள் கூறினர்.

அனந்தநாக் மற்றம் ஷோபியான் மாவட்டங்களில், பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்ததுகுறித்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் மெஹபூபா முஃப்தி, ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ராணுவ வீரர்கள் 3 பேர் வீர மரணம் அடைந்திருப்பதற்கு, அவர் தனது மரியாதையை செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். தீவிரவாதிகள் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து ஷோபியான், குல்காம் மற்றும் தெற்கு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதாகப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஶ்ரீநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், மொபைல் மற்றும் இணையதளச் சேவைகள் தற்காலிகமாக முடக்கிவைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!