நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராகத் தீக்குளித்த ம.தி.மு.க தொண்டர் மரணம்..!

நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராகத் தீக்குளித்த ம.தி.மு.க தொண்டர் ரவி, இன்று காலை உயிரிழந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி  யடைய வைத்துள்ளது.

ம தி மு க தொண்டர்

கடந்த 31-ம் தேதி, நியூட்ரினோ திட்டத்தை எதிர்த்து ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, கம்பம் வரை செல்லும் நடைப்பயணத்தை மதுரை பழங்காநத்தத்திலிருந்து தொடங்கினார். இந்த நிகழ்ச்சியை தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். பல்வேறு கட்சித் தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர். மிகவும் உற்சாகமாக நடைப்பயணம் கிளம்பவிருந்த நேரத்தில்தான், சிவகாசியைச் சேர்ந்த ம.தி.மு.க இளைஞரணி நிர்வாகி ரவி, திடீரென்று பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

''நியூட்ரினோ திட்டத்தைச் செயல்படுத்த உள்ள மத்திய அரசுக்கு எதிராக இந்த முடிவை எடுத்தேன்'' என்று கூறி நெருப்பு வைத்துக் கொண்டவரை, அங்கிருந்த கட்சித் தொண்டர்கள் உடனடியாக  மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். இதைப் பார்த்து வைகோ கண்ணீர் விட்டுக் கதறி அழுதார். இதனால், நடைப்பயண நிகழ்ச்சி மிகுந்த சோகத்துடன் தொடங்கியது. ரவிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க வேண்டுமென்று வைகோ தொடர்ந்து மதுரை நிர்வாகிகளிடம் தெரிவித்துக்கொண்டிருந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று அதிகாலை மரணமடைந்தார். இத்தகவலைக் கேள்விப்பட்டு, மதுரைக்குக் கிளம்பி வந்துகொண்டிருக்கிறார் வைகோ.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!