வெளியிடப்பட்ட நேரம்: 09:09 (02/04/2018)

கடைசி தொடர்பு:14:40 (02/04/2018)

இயற்பியல் புரட்சிக்கு வித்திடும் நியூட்ரினோ ஆய்வு... மக்களுக்கு என்ன பயன்? #WhyNeutrinoInTN

1965ம் ஆண்டு கர்நாடகாவில் அமைந்திருக்கும் கோலார் தங்கச் சுரங்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுரங்கமானது நீரினால் பாதிப்புக்குள்ளான போது இத்திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் நியூட்ரினோ ஆய்வுமையம் அமைப்பதற்கான இடங்களை இந்தியா முழுவதும் தேடினர்.

இயற்பியல் புரட்சிக்கு வித்திடும் நியூட்ரினோ ஆய்வு...  மக்களுக்கு என்ன பயன்? #WhyNeutrinoInTN

ஐ.என்.ஓ (INO) என்று அழைக்கப்படும் ‘இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம்` (Indian Based Nutrino Observatory) திட்டத்திற்காக மத்திய அரசு 1500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. தொடர் சர்ச்சைகளில் சிக்கிய இத்திட்டம் சில காலம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில், சமீப காலமாக நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டிவருகிறது. இச்சூழலில், நியூட்ரினோ துகள் பற்றி அறிந்துகொள்ள வேண்டியது அவசியமான ஒன்று.

நியூட்ரினோ என்றால் என்ன?

13 முதல் 14 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற காஸ்மிக் வெடிப்பு காரணமாக இந்த பேரண்டம் உருவானது. இதனை பெருவெடிப்புக் கொள்கை (Big Bang Theory) என்பர். இப்பேரண்டம் உருவான விதத்தினை பற்றிய மேலும் பல தவல்களை பெற நியூட்ரினோ கதிர்களை ஆய்வு செய்ய வேண்டும் என்பது விஞ்ஞானிகளின் நிலைப்பாடு. நியூட்ரினோ ஆய்வு மூலம் துகள் இயற்பியலில் (Particle Physics) மாபெரும் புரட்சி ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. குறிப்பாக ஐன்ஸ்டீனின் சார்புக்கோட்பாடு முற்றிலும் மாறுபடும்.

அணுவின் ஓர் அங்கமான எலெக்ட்ரான் துகளுடன் இயற்கையாகவே இரண்டு துகள்கள் உள்ளன. அவை மியூவான் மற்றும் டாவ். இந்த மூன்று துகள்களுக்கு இணையாக மூன்று நியூட்ரினோ துகள்கள் இருக்கும். அவற்றிற்கு எலெக்ட்ரான் நியூட்ரினோ, மியூனான் நியூட்ரினோ, டாவ்  நியூட்ரினோ என்று பெயர். நியூட்ரினோ துகளானது எந்தப் பொருளுடனும் வினைபுரியாத மின்காந்த சக்தியற்ற ஒரு துகள். பேரண்டம் உருவான காலத்திலேயே நியூட்ரினோக்கள் உருவாகிவிட்டன.

நியூட்ரினோ ஆய்வு

போட்டோ : விக்கிபீடியா

நம் உடல் உருவாக்கும் நியூட்ரினோக்கள் :

சூரியனிடம் இருந்து பூமிக்கு ஒரு சதுரசென்டிமீட்டருக்கு 40பில்லியன் நியூட்ரினோக்கள் வருகின்றன. இதனை ஒவ்வொரு நொடியும் 1.73ற்கு பிறகு 38பூஜ்ஜியம் சேர்த்தால் வரும் எண் தொகை அளவிற்கு நியூட்ரினோக்கள் வெளிவருகிறது எனலாம். அதே போல் நமது உடலும் நியூட்ரினோக்களை தயாரிக்கும். நமது உடலில் இருக்கும் 20மில்லி கிராம் பொட்டாசியமானது 340மில்லி கிராம் நியூட்ரினோவை தயாரிக்கும் என்கிறது ஆய்வு. நியூட்ரினோ துகள்களுக்கு எடை இல்லை என்று முதலில் சொல்லப்பட்டாலும், பிற்காலங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் நியூட்ரினோ துகள்களுக்கு எடை உள்ளது என்று கண்டறியப்பட்டது. நியூட்ரினோ துகளானது ஒரு நொடிக்கு மூன்று லட்சம் கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. போட்டான் எனப்படும் ஒளித்துகள்களுக்கு அடுத்தபடியாக பிரபஞ்சத்தில் அதிக எண்ணிக்கையில் சுற்றிக்கொண்டிருப்பது நியூட்ரினோ துகள் தான்.  இப்போது கூட நம்மை ஏராளமான நியூட்ரினோ துகள்கள் கடந்துசென்றுகொண்டு தான் இருக்கின்றன. சுருக்கமான சொல்லவேண்டும் என்றால் தற்போது நியூட்ரினோ காட்டில் தான் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். நம்மை சூழ்ந்து துளைத்துச் சென்றுகொண்டிருக்கின்றன நியூட்ரினோ துகள்கள்.

நியூட்ரினோ ஆய்வு

இந்தியாவில் நியூட்ரினோ துகள் ஆய்வுகள் :

1930ம் ஆண்டு ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி பாலி (Walf Gang Pauli) என்பவர் ஆரம்பித்துவைத்த நியூட்ரினோ பற்றிய ஆய்வுகளானது இன்று வரை தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தியாவைப் பொருத்தவரை 1965ம் ஆண்டு கர்நாடகாவில் அமைந்திருக்கும் கோலார் தங்கச் சுரங்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுரங்கமானது நீரினால் பாதிப்புக்குள்ளான போது இத்திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் நியூட்ரினோ ஆய்வுமையம் அமைப்பதற்கான இடங்களை இந்தியா முழுவதும் தேடினர். இமயமலைப் பகுதியில் டார்ஜிலிங், மணாலி, ரோத்தல். மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் சிங்காரா வனப்பகுதி, குமுளி, சுருளி மலைப்பகுதி என பல இடங்கள் ஆய்வு செய்யப்பட்டது. அங்கெல்லாம் பல்வேறு எதிர்ப்புகளை சந்தித்த பின்னர், இறுதியாக பொட்டிபுரம் அம்பரப்பர் மலை தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நியூட்ரினோ துகள்களின் ஆய்வு மூலம் இயற்பியல் துறையில் புரட்சி ஏற்படும் என்று சொல்லப்படும் சூழலில், இதனால் மக்களுக்கு என்ன பயன் என்ற கேள்வியை பொட்டிபுரம் மக்கள் அழுத்தமாக எழுப்புகின்றன. சமூகம் சார்ந்த ஒரு திட்டம் என்றாலும் கூட பரவாயில்லை. ஒரு அறிவியல் ஆய்விற்கு இவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டுமா, மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக வேண்டுமா போன்ற கேள்விகள் பல தரப்பிலும் எழுப்பப்படுகிறது. 


டிரெண்டிங் @ விகடன்