போதையில் பெண் காவலர் - வைரலாகும் வீடியோ 

போதையில் பெண் போலீஸ்

சமூக வலைதளத்தில் சீருடையில் இருக்கும் பெண் காவலர் ஒருவர், போதையில் உளறும் வீடியோ வைரலாகிவருகிறது. இந்தப் பெண் காவலர், தமிழகக் காவல்துறையைச் சேர்ந்தவர் என்று தெரியவந்துள்ளது. 

 சமூக வலைதளத்தில், தமிழகக் காவல்துறையைச் சேர்ந்த பெண் காவலர் ஒருவர், சீருடையில் காருக்குள் இருக்கிறார். அவரை, டிரைவர் இருக்கையில் அமர்ந்திருக்கும் நபர் வீடியோ எடுக்கிறார். அப்போது, அந்தப் பெண் காவலர் போதையில் இருக்கிறார். வீடியோ எடுப்பதை தெரிந்துகொண்ட அவர், முகத்தை கையால் மறைக்கிறார். தொடர்ந்து, அந்தப் பெண் காவலர் மதுபானம் அருந்தும் காட்சியோடு வீடியோ முடிவடைகிறது. ஒரு நிமிடம், 7 நொடிகள் வரை அந்த வீடியோ பதிவு உள்ளது. வீடியோவில் இருவர் பேசும் ஆடியோவும் உள்ளது. அதில், `கொஞ்சம் குடி' என்று பெண் காவலர் சொல்கிறார். அப்போது, `இனி குடித்தால் என்ன, குடிக்கவில்லை என்றால் என்ன' என்று இன்னொருவர் பேசுகிறார். 

 

 

 இந்த வீடியோ விவரத்தை காவல்துறை உயரதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்றோம். வீடியோவைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சியோடு, "அந்தப் பெண் காவலர்மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். அவர், யார் என்று விவரம் கேட்டுள்ளோம். அந்த வீடியோ எடுத்த நபர்கள் குறித்தும் விசாரித்துவருகிறோம்" என்றனர்.   

 வீடியோவில் இருந்த பெண் காவலர், திண்டுக்கல் மாவட்டம், பழநி தாலுகாவில் உள்ள சாமிநாதபுரம் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஜெய்னுப் நிஷா என்று தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட பெண் காவலரை, எஸ்.பி சக்திவேல், சஸ்பெண்ட் செய்துள்ளார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!