வெளியிடப்பட்ட நேரம்: 13:12 (02/04/2018)

கடைசி தொடர்பு:13:12 (02/04/2018)

`காவிரி நீர் எங்கள் பிறப்புரிமை' - சாஸ்திரி பவனை ஸ்தம்பிக்கவைத்த மே 17 இயக்கத்தினர்! #WeWantCMB

`காவிரி நீர் எங்கள் பிறப்புரிமை' - சாஸ்திரி பவனை ஸ்தம்பிக்கவைத்த மே 17 இயக்கத்தினர்! #WeWantCMB

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து சென்னையில் மத்திய அரசு அலுவலகங்கள் முன் போராட்டம் நடந்து வருகிறது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் மத்திய அரசு காலம் தாழ்த்துவதை தொடர்ந்து இவ்விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்காக ஸ்டாலின் தலைமையில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், வரும் 5-ம் தேதி மாநிலம் முழுவதும் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படும் என்றும் இன்று முதல் தொடர் போராட்டங்களை நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து சென்னை வள்ளுவர் கூட்டம் சென்ற ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் திடீரென போராட ஆரம்பித்தனர். இந்நிலையில், மத்திய அரசைக் கண்டித்து இன்றும் போராட்டங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. 

அந்தவகையில், சென்னையில் இன்று மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு மே 17 இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர். அப்போது காவிரி நீர் எங்கள் பிறப்புரிமை எனக் கூறி அவர்கள் கோஷம் எழுப்பினர். போராட்டம் நடத்தினர்.  சென்னை சாஸ்திரி பவனை முற்றுகையிட்ட திருமுருகன் காந்தி உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். இதேபோல், சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும்  தஞ்சை, திருவாரூர் கும்பகோணம், கோயம்புத்தூர் எனப் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம், ரயில் மறியல் என மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் வெடித்துள்ளன. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க