வெளியிடப்பட்ட நேரம்: 15:20 (02/04/2018)

கடைசி தொடர்பு:15:20 (02/04/2018)

`ராகுலும் சோனியாவும் ஆதரவு அளித்தால் நாங்கள் தயார்!' - கலகலத்த தம்பிதுரை!

'உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கள் நம்பிக்கை தரும் வகையில் உள்ளது' என தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

தம்பிதுரை

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசுக்கு எதிராக, தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கை இன்றே விசாரணைசெய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த நீதிபதிகள்,  `காவிரி மேலாண்மை வாரியம் என்று தீர்ப்பில் கூறவில்லை. செயல்திட்டம் (ஸ்கீம்) என்றே குறிப்பிட்டோம். ஸ்கீம் என்ற வார்த்தை காவிரியின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது. வழக்கின் விசாரணை, வரும் 9-ம் தேதி நடைபெறும்' எனக் கூறினர். இதனால், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தொடர்ந்து இழுபறி நீடித்துவருகிறது. இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, இன்றும் நாடாளுமன்றத்தில் அ.தி.மு.க  எம்.பி-க்கள் போராட்டம் நடத்தினர். 

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, ``ராஜினாமா செய்வதற்காக மக்கள் எங்களைத் தேர்ந்தெடுக்கவில்லை. எங்களது கடமை போராடுவதுதான். ராஜினாமா செய்வது அல்ல. முத்துக்கருப்பன் ராஜினாமா செய்ய நினைத்தது அவரது தனிப்பட்ட முடிவு. நாங்கள் தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்போம். உச்ச நீதிமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் எங்களது போராட்டம் தொடரும். காவிரி விவகாரத்தில், தமிழகத்தில் ஒற்றுமை உணர்வு ஏற்பட்டுள்ளது பாராட்டத்தக்கது. அடுத்தகட்டமாக மக்களுடன் சேர்ந்து போராட உள்ளோம். ஸ்கீம் குறித்து உச்ச நீதிமன்றத்தில் காவிரித் தீர்ப்பாயம் தெளிவாகக் கூறியுள்ளது. மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர 50 எம்.பி-க்கள் தேவை. அ.தி.மு.க-வுக்கு 37 பேர் மட்டுமே உள்ளனர். ராகுல் காந்தியும் சோனியா காந்தியும் ஆதரவு அளிப்பதாக உறுதி அளித்தால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவருவோம்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க