`நாம் இருவர் நமக்கு இருவர்' சீரியல் அரவிந்த் சாமியின் கதையா?’ - என்ன சொல்கிறார் மிர்ச்சி செந்தில்?

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் சென்டிமென்ட்

விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சீரியல், 'நாம் இருவர் நமக்கு இருவர்' . மிர்ச்சி செந்தில் முதன் முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார். சீரியலில் ஒரு செந்திலுடைய கேரக்டர் பெயர் அரவிந்த்.

மிர்ச்சி செந்தில்

கதைப்படி, அவரை அவரது பெற்றோர் பிறந்ததுமே தத்துக் கொடுத்து விடுவார்களாம். சீரியல் தொடங்கும்போதே அதில் ஒரு ட்விஸ்ட் அல்லது பரபரப்பை வைப்பது விஜய் டிவியின் வழக்கம். உதாரணத்துக்கு நிஜமாகவே காதலித்துக்கொண்டிருக்கும் அன்வர்-சமீரா ஜோடியை காதலர்களாக நடிக்க வைத்த 'பகல் நிலவு' தொடரைச் சொல்லலாம். 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரிலும் அத்தகைய ஒரு பரபரப்பை நிகழ்த்த நினைத்தார்கள்' என்கிற ஒரு தகவலும் உலா வந்தது. அதாவது நடிகர் அரவிந்த சாமியை சிறுவயதிலேயே தத்துக் கொடுத்த அவருடைய தந்தையும் நடிகருமான டெல்லிகுமாரையே இத்தொடரில் நடிக்க வைக்க முயற்சி நடந்ததாகவும் அவர் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால், இத்தகவலை சேனல் உறுதி செய்யவில்லை. மிர்ச்சி செந்திலிடம்  கேட்டதற்கு, 'நான் முதன் முதலாக இரட்டை வேடத்தில் நடிக்கிறேன்; மற்ற விஷயங்கள் எனக்குத் தெரியாது' என்றார்.

ரேஷ்மி

 

அதேநேரம், பழைய 'சரவணன் மீனாட்சி' செண்டிமென்ட் ஒன்று ஒர்க் அவுட் ஆகி, இந்த சீரியல் ஹிட் ஆகுமென நம்புகிறார்களாம். மிர்ச்சி செந்திலும் ஶ்ரீஜாவும் ஜோடியாக நடித்த 'சரவணன் - மீனாட்சி' முதல் சீசன் நல்ல வரவேற்பு பெற்றதாலேயே இன்று வரை அதே பெயரில் பார்ட் 2 வரை வந்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. அந்த முதல் சீசனின் கன்னட வெர்சனில் ஹீரோயினாக (மீனாட்சியாக) நடித்த ரேஷ்மியையே 'நாம் இருவர் நமக்கு இருவர்' தொடரிலும் மிர்ச்சி செந்திலுக்கு ஜோடியாக்கியுள்ளனர். சரவணனும் மீனாட்சியும் சேர்ந்தால் அந்த சீரியல் ஹிட்' என நினைக்கிறார்களாம். ஜோடி சென்டிமென்ட் கிடக்கட்டும், சீரியலின் கதை நடிகர் அரவிந்த் சாமியின் கதையா என்கிற கேள்வியே சீரியல் பிரியர்களைக் குடைந்து கொண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!