வெளியிடப்பட்ட நேரம்: 16:31 (02/04/2018)

கடைசி தொடர்பு:16:31 (02/04/2018)

`திரைத்துறைக்குத் தனி வாரியம்!’ - அமைச்சர் கடம்பூர் ராஜு உறுதி

திரைத்துறைக்கு என தனி வாரியம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜு உறுதியளித்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் பிரச்னை, க்யூப், யூ.எஃப்.ஓ கட்டணம் உயர்வு, திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை, பெஃப்சி தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், புதுத் திரைப்படங்கள் வெளியீடு ரத்து எனப் பல பிரச்னைகளின் காரணத்தால் தமிழ் சினிமாத்துறையே ஸ்தம்பித்து நிற்கிறது.

விஷால் - கடம்பூர் ராஜூ

``இந்தப் பிரச்னைகளை அரசாங்கம் தலையிட்டு தீர்த்து வைக்க வேண்டும். சினிமாத்துறைக்கென தனி வாரியம் அமைத்து, அதில் தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், நடிகர்கள், தொழிலாளர்கள் என எல்லாத் துறையைச் சார்ந்தவர்களும் இருக்க வேண்டும். யாருக்கும் பிரச்னை வராமல் இந்தத் தொழிலை நடத்த அரசாங்கம் வழி செய்ய வேண்டும்" என்று ஒட்டுமொத்த திரைத்துறை சார்பாகக் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, "சினிமாத் துறைக்கென தனி வாரியம் அமைப்பட்டும். திரைத்துறை தொடர்பான பிரச்னைகள் முதலமைச்சர் பழனிசாமியின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது" என்று உறுதியளித்துள்ளார். அதற்கு நடிகர் சங்கச் செயலாளரும் தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான விஷால் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், `திரைத்துறை வைத்திருக்கும் மற்ற கோரிக்கைகளையும் அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம்' என்றும் விஷால் தெரிவித்துள்ளார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க