`டி.என்.சேஷன் வருத்தமாக இருக்கிறார்; வதந்திகளை நம்ப வேண்டாம்!’ - குடும்பத்தினர் தகவல்

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் சென்னையில் உள்ள வீட்டில் நலமுடன் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

`டி.என்.சேஷன் வருத்தமாக இருக்கிறார்; வதந்திகளை நம்ப வேண்டாம்!’  - குடும்பத்தினர் தகவல்

முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் டி.என்.சேஷன் சென்னையில் உள்ள வீட்டில் நலமுடன் இருப்பதாக அவரின் குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். 

டி.என்.சேஷனுடன் கமல்

தலைமைத் தேர்தல் ஆணையராகக் கடந்த 1990-96 காலகட்டத்தில் பதவி வகித்த டி.என்.சேஷன், நாட்டின் தேர்தல் முறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தவர். தலைமைத் தேர்தல் ஆணையராக இவர் பதவி வகித்தபோதுதான், வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நடைமுறை தொடங்கியது. அதேபோல், ஒரு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் செலவு செய்ய வேண்டிய அதிகபட்ச தொகை குறித்த கட்டுப்பாடும் இவரது பதவிக் காலத்திலேயே விதிக்கப்பட்டது. 

ஓய்வுக்குப் பின்னர், சென்னை மயிலாப்பூரில் உள்ள இல்லத்தில் மனைவி ஜெயா சேஷனுடன் அவர் வசித்து வந்தார். உடல் நலக்குறைவால் டி.என்.சேஷனின் மனைவி ஜெயா கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார். மனைவியைப் பிரிந்த துயரில் வருத்தத்தில் இருக்கிறார் சேஷன். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து வீண் வதந்தி கிளம்பியது. 

இதுகுறித்து சேஷனின் குடும்ப வட்டாரங்களில் விசாரித்தோம். அவர்கள் கூறுகையில், ``அவர் நலமாக இருக்கிறார். சென்னை மயிலாப்பூரில் உள்ள இல்லத்திலேயே அவர் வசித்து வருகிறார். அவர் உடல்நிலை தொடர்பான புரளிகளை நம்ப வேண்டாம்’’ என்றனர். அரசியல் கட்சிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய டி.என்.சேஷனை, கட்சித் தொடங்குவதற்கு முன்பாக நடிகர் கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!