`தோல்வி பயத்தில் வாக்குச் சீட்டைக் கிழித்த அ.தி.மு.க. வேட்பாளர்!’ - கூட்டுறவு சங்கத் தேர்தல் நிறுத்தம்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நக்கலமுத்தன்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற தேர்தலின் போது, அ.தி.மு.கவைச் சேர்ந்த அமுல் ராஜ் என்ற வேட்பாளர் வாக்குசீட்டுகளைக் கிழித்ததால் தேர்தல் உடனடியாக நிறுத்தப்பட்டது. 

 கூட்டுறவு சங்கத் தேர்தல்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேகில் உள்ளது  நக்கலமுத்தன்பட்டி கிராமம். அந்த கிராமத்தில் உள்ள நக்கலமுத்தன்பட்டி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு தேர்தலுக்காக 19 பேர் மனுதாக்கல் செய்து இருந்தனர். மொத்தம் 1,226 வாக்குகள் உள்ள இந்த கடன் சங்கத்தில், இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.

co operative wallet paper tears

 இத்தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க.,வைச்  சேந்த அமல்ராஜ் என்பவர் வாக்களிக்க வந்தார். அப்போது,  தீடீரென வாக்குச் சீட்டினை கிழித்து தேர்தல் அதிகாரியுடன் அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அமுல்ராஜைக் கைது செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் கலவரத்தை ஏற்படுத்தி சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுள்ளதால் சங்கத்தின் நிர்வாகக் குழு மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நிறுத்தப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் சுவாமிராஜா அறிவித்தார். இதையடுத்து அங்கு தேர்தல் நிறுத்தப்பட்ட்து.

அந்த சங்கத்தின் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர் அமுல்ராஜூக்கு எதிராக மற்றொரு தரப்பினர்  வெற்றிபெறும் சூழ்நிலையில் இருப்பதால் ஆத்திரத்தில் தேர்தலை நடத்த விடமால் வாக்குச்சீட்டுகளைக் கிழித்துப் போட்டு பிரச்னையில் ஈடுபட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அமுல்ராஜிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!