பைக் திருடிய சிறுவர்கள்..! மடக்கி பிடித்த திருப்பூர் போலீஸார்

திருப்பூரில் பைக் திருட்டில் ஈடுபட்ட சிறுவர்கள் 2 பேரை போலீஸார் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர். 

 

பைக் திருட்டு

திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட அறிவொளி நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன். பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வரும் இவர், வழக்கம்போல உணவு இடைவேளையின்போது, தன்னுடைய வீட்டின் முன்பாக பைக்கை நிறுத்திவிட்டு உள்ளே சென்றிருக்கிறார். உணவு அருந்திவிட்டு வெளியேவந்து பார்த்தபோது பைக் திருடு போயிருந்தது. 

பைக் திருட்டு சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் ராஜேந்திரன் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில், ஊத்துக்குளி ரோடு பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, அப்பகுதி வழியே பைக்கில் வந்த 2 சிறுவர்களை பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுவர்கள் ஒட்டிவந்த பைக், ராஜேந்திரனுக்கு சொந்தமானது என்பதை போலீஸார் கண்டறிந்தனர். சிறுவர்களிடம் விசாரித்தபோது, திருப்பூரின் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் இந்த சிறுவர்கள் இருவரும், ஒன்றாக சேர்ந்தே ராஜேந்திரனின் பைக்கை திருடியது தெரிய வந்தது. அதன்பின்னர் பைக்கை பறிமுதல் செய்த காவலர்கள் 2 சிறுவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!