வெளியிடப்பட்ட நேரம்: 09:00 (03/04/2018)

கடைசி தொடர்பு:09:00 (03/04/2018)

`ரெண்டு வருஷமா உதவித்தொகை கொடுக்காம அலையவைக்கிறாங்க' - திருச்சியில் தவிக்கும் மாணவர்கள்!

பள்ளியில் படிக்கும்போது வரவேண்டிய அரசு உதவித்தொகை கிடைக்காமல், கடந்த இரண்டு வருடங்களாகத் தவிப்பதாகப்  புலம்புகிறார்கள், திருச்சி மாணவர்கள்.

மாணவர்கள்திருச்சி மாவட்டம் தொட்டியத்தை அடுத்துள்ளது, காட்டுப்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி. இந்தப் பள்ளியில் அப்பகுதியில் உள்ள கிராமப்புற மாணவர்கள்  படித்துவருகின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்ச்சிபெற்ற மாணவர்களுக்கு தலா ஆறாயிரம் வழங்குவதாக அறிவித்தது. அந்தப் பணம் இதுவரை கிடைக்கவில்லை என மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனுக்கொடுத்துவருகிறார்கள், அப்பள்ளியில் படித்து முடித்த மாணவர்கள்.  

காட்டுப்புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து, தற்போது திருச்சி மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களான ஶ்ரீதரன், இளவரசன் ஆகியோர் தலைமையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் கு.ராசாமணியை சந்தித்து மனுக்கொடுத்தனர். அவர்களைச் சந்தித்தோம்.

நம்மிடம் பேசிய ஶ்ரீதரன், “கடந்த 2016-ம் ஆண்டு, நாங்கள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்தோம். தற்போது, திருச்சி மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் படித்துவருகிறோம். ஆனால், இதுவரை எங்களுக்கு பள்ளியில் வழங்கக்கூடிய உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை கிடைக்கவில்லை. உதவித்தொகையைக் கேட்டு  இரண்டு வருடங்களாக அலைகிறோம். இதோ வந்துடும் என இழுத்தடித்துக்கொண்டே உள்ளார்கள். இதுதொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பல முறை எங்களுடன் படித்த மாணவர்கள் மனுக்கொடுத்துவிட்டார்கள். தற்போது, சிலருக்கு பணம் கிடைத்துவிட்டது. ஆனால், பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்கவில்லை. எங்களின் கஷ்டத்தை மாவட்ட ஆட்சியரிடம் கூறி முறையிட்டுள்ளோம்” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க