வெளியிடப்பட்ட நேரம்: 11:45 (03/04/2018)

கடைசி தொடர்பு:12:54 (03/04/2018)

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ஆடி கார் மாயம்!

இசையமைப்பாளர்

 சென்னை எழும்பூரில் குடியிருக்கும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் ஆடிகாரை எடுத்துச் சென்ற டிரைவர்மீது போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

 சென்னை எழும்பூர், எத்திராஜ் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவர், ராஜராஜன். இவர், எழும்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். அதில், 'என்னுடைய வீட்டில் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா, அவரின் மனைவியுடன் குடியிருக்கிறார். தற்போது அவர் மதுரைக்குச் சென்றுள்ளார். இந்த நிலையில், வீட்டிலிருந்த ஆடி காரை டிரைவர் நவாஸ்கான் சாதிக் கடந்த 2-ம் தேதி மாலை 5 மணிக்கு எடுத்துச் சென்றார். பிறகு, அவர் வீடு திரும்பவில்லை. டிரைவரைத் தொடர்புகொள்ளவும் முடியவில்லை. எனவே, காரை மீட்டுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில், போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். 

ஆடி காருடன் தலைமறைவான டிரைவர் நவாஸ்கானை போலீஸார் தேடிவந்த நிலையில், இன்று அதிகாலை அவரே காருடன் வீட்டுக்கு வந்துள்ளார். அவரிடம் யுவன் ஷங்கர் ராஜா தரப்பினர் விசாரணை நடத்திவருகின்றனர். காருடன் டிரைவர் திரும்பி வந்ததால், புகாரை வாபஸ் பெற உள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா தரப்பு தெரிவித்தது.