வெளியிடப்பட்ட நேரம்: 11:47 (03/04/2018)

கடைசி தொடர்பு:11:47 (03/04/2018)

காவிரி மேலாண்மை வாரியம்: மத்திய அரசுக்கு எதிராகப் புதுச்சேரியில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, புதுச்சேரியில் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

அதிமுக

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகமெங்கும் அ.தி.மு.க-வினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். சென்னையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் நிலையில், மாவட்டம் தோறும் அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியிருக்கிறது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், மத்திய அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்காத புதுச்சேரி அரசு மற்றும் வழக்கு தொடுப்பதற்குத் தடையாக உள்ள துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தியும், புதுச்சேரி மாநில அ.தி.மு.க சார்பில் சுதேசி மில் அருகே உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கி நடைபெற்றுவருகிறது. இதில், தமிழகத்தின் முன்னாள் பால்வளத்துறை அமைச்சரும், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளருமான ராமச்சந்திரன், புதுச்சேரி மாநிலச் செயலாளர் புருஷோத்தமன், சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், பாஸ்கர், வையாபுரி மணிகண்டன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஓம்சக்தி சேகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். காலை தொடங்கிய இந்தப் போராட்டம் மாலை 5 மணி வரை நடைபெற இருக்கிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க