'நடிகர் வடிவேலு பாணியில்தான் ஸ்டாலின் போராட்டம்'- கலாய்க்கும் அமைச்சர் சி.வி.சண்முகம் | DMK executive leader Stalin has conducted the protest like the actor Vadivelu says C.V Shanmugam

வெளியிடப்பட்ட நேரம்: 15:03 (03/04/2018)

கடைசி தொடர்பு:15:03 (03/04/2018)

'நடிகர் வடிவேலு பாணியில்தான் ஸ்டாலின் போராட்டம்'- கலாய்க்கும் அமைச்சர் சி.வி.சண்முகம்

”நடிகர் வடிவேலு போலதான் தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் போராட்டம் நடத்துகிறார்” என அ.தி.மு.க அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சித்திருக்கிறார்.

சி வி சண்முகம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, தமிழகம் முழுக்க இன்று அ.தி.மு.க சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்துவருகிறது. அதேபோல, வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தி.மு.க-வும் மூன்றாவது நாளாக இன்று பஸ் மற்றும் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டுவருகிறது. விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சரும் தி.மு.க எம்.எல்.ஏ-வுமான பொன்முடி தலைமையில், நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தி.மு.க-வின் இந்தப் போராட்டங்கள்குறித்து விழுப்புரத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் இருக்கும் அமைச்சர் சி.வி.சண்முகம், “தி.மு.க, மக்களைப் பற்றியோ அவர்களின் கஷ்டங்களைப்பற்றியோ சிந்திப்பது கிடையாது. ஆனால், எந்தவிதமான அறிவிப்பும் இல்லாமல் இன்று பஸ் மறியல், ரயில் மறியல் போராட்டங்களை நடத்திவருகிறது. அவர்களுடைய நோக்கம் 'நாங்களும் இருக்கிறோம்' என்று காட்டுவதுதான். எப்படி ஒரு படத்தில் நடிகர் வடிவேலு, 'நான் ஜெயிலுக்குப் போறேன்... நான் ஜெயிலுக்குப் போறேன்…' என்று சொல்வாரோ, அப்படித்தான் தற்போது தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலிலும் 'நான் போராட்டம் நடத்துகிறேன்.. நான் போராட்டம் நடத்துகிறேன்...' என்று காட்டிக் கொண்டிருக்கிறார். ஏற்கெனவே சட்டையைக் கிழித்துக் காட்டினாரே அப்படித்தான் தற்போது போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறார். ஆனால், என்ன நாடகம் நடித்தாலும், எத்தனை சட்டை, பனியன்களைக் கிழித்தாலும் அவர்களுடைய நாடகம் மக்களிடத்தில் எடுபடாது” என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க


[X] Close

[X] Close