`தலைமைச் செயலருக்காக விதிகள் மீறப்படவில்லை' - அறநிலையத்துறை விளக்கம்!  | Rules are not violated for Chief Secretary - Tiruttani Temple Administration gives Description

வெளியிடப்பட்ட நேரம்: 15:10 (03/04/2018)

கடைசி தொடர்பு:15:13 (03/04/2018)

`தலைமைச் செயலருக்காக விதிகள் மீறப்படவில்லை' - அறநிலையத்துறை விளக்கம்! 

`தலைமைச் செயலருக்காக விதிகள் மீறப்படவில்லை' - அறநிலையத்துறை விளக்கம்! 

கடந்த வெள்ளிக்கிழமை தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் திருத்தணி முருகன் கோயில் தனது குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார். கிரிஜாவுக்குக் கோயில் தக்கார் ஜெய்சங்கர், அதிகாரிகள் ஆகியோர் நினைவுப் பரிசு வழங்கினர். அப்போது, கிரிஜா வைத்தியநாதன் சாமி தரிசனம் செய்த நேரத்தில் பக்தர்கள் யாரையும் சாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை எனப் பொதுமக்கள் புகார் கூறியது குறித்து விகடன் இணையதளத்தில் செய்தி வெளியானது. இதற்கு தற்போது கோயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

கிரிஜா வைத்தியநாதன்

இதுகுறித்து தெரிவித்துள்ள கோயில் இணை ஆணையர் சிவாஜி, ``30.3.2018 அன்று காலை 8.40 மணியளவில் தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் திருத்தணி, அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தரிசனத்துக்கு வருகை தந்தனர். சுமார் 20 நிமிடத்துக்குள் சுவாமி தரிசனம் முடித்துவிட்டு சென்னைக்கு கிளம்பிச் சென்றனர். தலைமைச் செயலர் தரிசனத்தின்போது பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் செல்லும் தரிசன வரிசையில் எவ்வித தடையுமில்லாமல் தரிசனம் செய்து சென்றனர். 

தலைமைச் செயலர் சுவாமி தரிசனம் செய்தபோது வரிசையில் செல்லும் பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் வழக்கம்போல் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் தரிசன வசதிகளை நிறுத்தவில்லை. மேலும், தலைமைச் செயலர் மிகக் குறுகிய கால அவகாசத்தில் தரிசனம் முடித்துவிட்டுச் சென்றுவிட்டார். இந்நிலையில் தரிசனத்துக்கு வருகை தந்த பக்தர்களும் தங்களுக்கு கால தாமதம் ஏற்பட்டது எனப் புகார் ஏதும் திருக்கோயில் நிர்வாகத்திடம் வழங்கவில்லை. நேரடியாகவும் புகார்கள் ஏதும் தெரிவிக்கவில்லை. எனவே, பக்தர்கள் பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது என இணையதளத்தில் செய்தி வெளியானது முற்றிலும் தவறான செய்தியாகும்" என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க