வெளியிடப்பட்ட நேரம்: 16:57 (03/04/2018)

கடைசி தொடர்பு:17:27 (03/04/2018)

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி ஏப்ரல் 8-ல் நடிகர் சங்கம் போராட்டம்! - ரஜினி, கமல் பங்கேற்பு

மத்திய அரசை வலியுறுத்தி நடிகர் சார்பாக அறவழி போராட்டம் நடத்த அறிவித்துள்ளனர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நடிகர் சங்கம் போராட்டம் நடத்த இருப்பதாக அதன் நிர்வாகிகள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அதற்கான தேதியை அறிவித்துள்ளனர்.

நடிகர் சங்கம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்று மத்திய அரசையும் தமிழக அரசையும் வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்றுவருகிறது. "மத்திய அரசை வலியுறுத்தி, மக்களுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் சார்பில் அடுத்த வாரம் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அது, என்ன மாதிரி போராட்டம் என்பது விரைவில் அறிவிக்கப்படும்" என்று நடிகர் சங்கம் அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று அதற்கான தேதியும் என்னவிதமான போராட்டம் என்பதையும் அறிவித்துள்ளனர். வரும் ஏப்ரல் 8-ம் தேதி ஞாயிறு அன்று காலை 9 மணி முதல் 1 மணி வரை சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அறவழிப் போராட்டம் நடத்த நடிகர் சங்கம் தீர்மானித்துள்ளது. ரஜினி, கமல் உட்பட திரைப்படத்துறையைச் சார்ந்த அனைவரும் பங்கேற்பார்கள் எனக் கூறியுள்ளனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க