தேசிய அளவில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை ஐ.ஐ.டி!

தேசிய அளவில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்த சென்னை ஐ.ஐ.டி!

தேசிய அளவில் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் பொறியியல் கல்வி என்ற பிரிவின்கீழ் சென்னை ஐ.ஐ.டி முதலிடம் பிடித்துள்ளது. 

சென்னை ஐ.ஐ.டி.

தேசிய அளவில் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் கடந்த 2016-ம் ஆண்டு முதல் வெளியிட்டு வருகிறது. ஒட்டுமொத்த பிரிவு, பல்கலைக்கழகங்கள், பொறியியல், கல்லூரிகள், மேலாண்மை, மருத்துவம் உள்ளிட்ட 9 பிரிவுகளின்கீழ் நாட்டின் முதல் 100 கல்வி நிறுவனங்கள் பட்டியலிடப்படும். இந்த ஆண்டுக்கான பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார். 

இந்தப் பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி கல்வி நிறுவனம், பொறியியல் பிரிவின்கீழ் முதல் இடத்தையும், ஒட்டுமொத்த பிரிவின்கீழ் இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. பொறியியல் பிரிவில் மும்பை ஐ.ஐ.டி மற்றும் டெல்லி ஐ.ஐ.டி ஆகிய நிறுவனங்கள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. ஒட்டுமொத்த பிரிவில் சென்னை அண்ணா பல்கலைக்கழகம், அகில இந்திய அளவில் 10 வது இடத்தையும் பொறியியல் பிரிவில் 8 வது இடத்தையும் பிடித்துள்ளது. 

பல்கலைக்கழகங்கள் பட்டியலில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனம் (IISC, Bengaluru) முதலிடத்தையும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் இரண்டாமிடத்தையும் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. மருத்துவக் கல்விக்கான தரவரிசைப் பட்டியலில் வேலூர் சி.எம்.சி மருத்துவக் கல்லூரி மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் இரண்டாம் இடத்தில் சண்டிகரில் உள்ள முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் (PGIMER) உள்ளன.  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!