`எங்களைப் பார்த்து மத்திய அரசு அரண்டுபோயுள்ளது!’ - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஆளும்கட்சியான அதிமுக இன்று

காவிரி விவகாரத்தில் அ.தி.மு.கவின் செயல்பாடுகளைப் பார்த்து மத்திய அரசு அரண்டு போயுள்ளதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

ராஜேந்திர பாலாஜி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி ஆளும்கட்சியான அதிமுக இன்று மாவட்ட தலைநகரங்களில் நடத்திய உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் வித்தியாசமாகக் கருத்துகளைக் கூறியுள்ளார்கள். அதிலும் விருதுநகரில் நடந்த உண்ணாவிரதத்தில் தலைமை வகித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களிடம் பேசியது வித்தியாசமாக இருந்தது. மத்திய அரசை எதிர்க்கும் வகையில் பேசுகிறாரா அல்லது ஆதரிக்கும் வகையில் பேசுகிறாரா என்று தொண்டர்களைக் குழப்பும் வகையில் அவரது பேச்சு இருந்தது.

அவர் பேசுகையில், ``கர்நாடக தேர்தலை மனதில் வைத்து மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தாமதப்படுத்தலாம். ஆனால், தமிழகத்திற்கு சாதகமான சூழ்நிலை எற்படும் வரை அ.தி.மு.க போராடும். மத்திய அரசு கூறுவதை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் தமிழகத்துக்குக் கிடையாது; தமிழக உரிமைக்காக அ.தி.மு.க. போராடுகிறது. மத்திய அரசு நன்மை செய்தால் தமிழக அரசு ஆதரவளிக்கும்; எதிராகச் செயல்பட்டால் அதனை எதிர்த்து தமிழக அரசு போராடும். தமிழர்களின் உரிமைக்காகப் போராடும் கட்சி அ.தி.மு.க மட்டும்தான். தமிழர்களை ஏமாற்றும் கட்சி தி.மு.க. ஒரு மாநிலத்தின் பிரச்னைக்காக 19 நாள்கள் தொடர்ந்து நாடாளுமன்றம் முடக்கப்பட்ட வரலாற்றை அ.தி.முக செய்து வருகிறது. எங்களை பார்த்து மத்திய அரசு அரண்டு போகும் அளவிற்கு மாநிலங்களவை, மக்களவையும் முடக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!