நாகப்பட்டினத்தில் அ.தி.மு.க உண்ணாவிரதப் போராட்டம்..!

Fasting ADMK

நாகப்பட்டினத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி அமைச்சர் ஓ.எஸ். மணியன் தலைமையில் அ.தி.மு.க.வினர்  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Fasting ADMK 1

நாகை பேருந்துநிலையம் அருகே அவுரித்திடலில் சுமார் ஆயிரம் பேர் அமரக்கூடிய உண்ணாவிரதப் போராட்டப் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. கூட்டம் அதிகமாக வந்ததால் அவசரமாக பந்தல் விரிவுபடுத்தப்பட்டது. கைத்தறித் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் போராட்டத்துக்குத் தலைமை தாங்கினார்.  மேடையில் இரண்டு பெரிய திரைகள் அமைக்கப்பட்டிருந்தது. அதில்,  ஜெயலலிதா ஏற்கெனவே காவிரிப் பிரச்னை குறித்து சட்டசபையில் பேசிய பேச்சுக்கள் மற்றும் காவிரி பிரச்சனைக்காக விவசாய சங்கங்கள் தஞ்சையில் நடத்திய பாராட்டுக் கூட்டத்தில் பேசிய பேச்சுக்கள் ஒளிபரப்பப்பட்டன. அதனைத் தொண்டர்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர்.

மதியம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் டேங்கர் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து உண்ணாவிரதப் பந்தலின் நாலாப்புறமும் தெளித்தனர். காவிரித் தண்ணீருக்காக நடத்திய போராட்டத்தில் டேங்கர் மூலம் தண்ணீர் வீணாக்கப்பட்டது. டீக்கடை, ஜுஸ் கடை மற்றும் காரைக்கால் எல்லையோரம் அமைந்துள்ள பிராந்திக்கடை இவைகளில் அ.தி.மு.க. தொண்டர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!