திருவள்ளூரில் அ.தி.மு.க உண்ணாவிரதப் போராட்டம்..!

காவிரி மேலாண்மை வாரியம்  அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து திருவள்ளூர் மாவட்ட அ.தி.மு.க சார்பில் இன்று திருவள்ளூர் ஆயில் மில் அருகில் நேற்று காலை 9 மணிக்கு உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.

போராட்டத்துக்கு பொன்னேரி எம்.எல்.ஏ.வும் மாவட்டச் செயலாளருமான பலராமன் தலைமை தாங்கினார். போராட்டத்துக்கு எம்.எல்.ஏ-க்கள் திருத்தணி நரசிம்மன், கும்முடிப்பூண்டி விஜயகுமார் அம்பத்தூர் அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர்கள் மாநில எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் சம்பத்குமார் மற்றும் அனைத்துப் பொறுப்பாளர்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். 

மாவட்டம் முழுவதிலிருந்தும் கட்சித் தொண்டர்கள் மகளிர் அணியினர் வேன் மூலம் வந்திருந்தனர். காலையில் பெருமளவில் கூட்டம் இருந்தது. இரண்டு மணிநேரம் கழித்து தொண்டர்கள் டீகடைக்கு சென்றுவிட்டனர். நேரம் போகப் போக படிப்படியாக தொண்டர்களின் கூட்டம்  குறைந்துவிட்டது. மதியம் 12 மணிக்குப் பிறகு பெருமளவில் தொண்டர்கள் டாஸ்மாக் கடைக்குச் சென்றுவிட்டனர். மாலை கூட்டம் முடியும் தருவாயில் 200  பேர் அளவுக்குகூட தொண்டர்கள் இல்லாமல் போய்விட்டனர். ஆர்பாட்டத்துக்கு வந்திருந்த தொண்டர் ஒருவர், 'இவங்க எல்லாம் சுகர் பேசண்டுங்க. உண்ணாவிரதக் கூட்டம் என்று சொன்னா யார் வருவார்கள்' என்று கவுண்டர் அடித்தார். பலரும் அவர் கருத்துக்குத் தலையாட்டினார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!