`வடமாநிலங்களில் நிகழ்ந்த வன்முறைக்கு காங்கிரஸே காரணம்' - தாவர்சந்த் கெலாட்! | Congress is responsible for the unrest over sc/st verdict - union minister 

வெளியிடப்பட்ட நேரம்: 08:00 (04/04/2018)

கடைசி தொடர்பு:08:19 (04/04/2018)

`வடமாநிலங்களில் நிகழ்ந்த வன்முறைக்கு காங்கிரஸே காரணம்' - தாவர்சந்த் கெலாட்!

தாவர்சந்த் கெலாட்- மத்திய அமைச்சர்

எஸ்.சி/ எஸ்.டி பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக, தற்போது எழுந்துள்ள வன்முறை மற்றும் பதற்றத்துக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என்று மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் குறைகூறியுள்ளார்.

எஸ்.சி / எஸ்.டி வன்கொடுமை பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து, வடமாநிலங்களில் நடந்த போராட்டத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் வடமாநிலங்களில் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், தற்போது எழுந்துள்ள வன்முறை மற்றும் பதற்றத்துக்கு காங்கிரஸ் கட்சியே காரணம் என மத்திய அமைச்சர்  தாவர்சந்த் கெலாட் குற்றம் சாட்டியுள்ளார். 

டெல்லியில் இதுகுறித்துப் பேட்டியளித்த தாவர்சந்த் கெலாட், ``பி.ஜே.பி. எப்போதும் பட்டியலின மக்களின் நலன்களுக்காக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வி.பி.சிங் அரசுக்கு பி.ஜே.பி. ஆதரவு அளித்தபோதுகூட பட்டியலின மக்களுக்காக பி.ஜே.பி. பாடுபட்டது. டாக்டர் அம்பேத்கரின் கொள்கைகளை நிறைவேற்றுவதற்கு நரேந்திர மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டிருப்பது நிகரில்லாதது. காங்கிரஸ் ஆட்சியின்போது பட்டியலின மக்களின் நலன்களுக்காக செயல்பட அக்கட்சி தவறிவிட்டது. எஸ்.சி/ எஸ்.டி பாதுகாப்புச் சட்டம் தொடர்பாக வெளியான உச்ச நீதிமன்றத் தீர்ப்பால் எழுந்துள்ள வன்முறை, மோதல்களுக்கு எதிர்க்கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் கட்சியே பொறுப்பு'' என்று அமைச்சர் கூறினார். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க