வெளியிடப்பட்ட நேரம்: 10:40 (04/04/2018)

கடைசி தொடர்பு:10:40 (04/04/2018)

சினிமா ஸ்டிரைக் விவகாரம்... திரையரங்க உரிமையாளர்கள் - விஷால் சந்திப்பு

திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்துடன் நடந்த பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படாததால்... சிங்கிள் ஸ்கிரீன் .திரையரங்க உரிமையாளர்கள் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் சந்தித்துப் பேசினர்

சினிமா ஸ்டிரைக் விவகாரம்... திரையரங்க உரிமையாளர்கள் - விஷால் சந்திப்பு

கடந்த மூன்று வாரமாக, தமிழ் சினிமாத்துறை அவர்களின் நலன் சார்ந்த பல கோரிக்கைகளை முன் வைத்து வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுவருகின்றது. இது தொடர்பாக, தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் சம்பந்தப்பட்டத் துறை மற்றும் சங்கத்தினருடன் தினமும் ஒரு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இந்த கியூப், யூ.எஃப்.ஓ கட்டண விவகாரம், திரையரங்க கணினிமயமாக்கல், திரையரங்குக்கு வரும் ஆர்வத்தை மக்களிடம் அதிகரிக்க ஃப்ளக்ஸிபிள் டிக்கெட் ரேட்டிங் உள்ளிட்ட பல விஷயங்களைத்  திரைப்படத் தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் ஆகியோரிடையே முத்தரப்புப் பேச்சுவார்த்தையில் திரையரங்க உரிமையாளர்கள் சில கோரிக்கைகளை, நிபந்தனைகளை ஒப்புக் கொள்ளாததால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. தற்போது, இந்த விஷயத்தில் ஒரு திருப்பமாய் ஒற்றைத் திரை வசதியுள்ளத் (சிங்கிள் ஸ்க்ரீன்) திரையிரங்க உரிமையாளர்கள் பலர் நேற்று தயாரிப்பாளர்கள் சங்க அலுவலகத்தில் இந்தப் பிரச்னைக் குறித்து தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் மற்றும் சங்க நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசித்தனர். மேலும், தனித்தனியாகவும் விஷாலுடன் பேசி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விஷால்

 

இந்நிலையில் இதே பிரச்னைக் குறித்து ஃபெப்ஸி தலைவர் ஆர்.கே. செல்வமணி மற்றும் தமிழ்நாடு திரையரங்க  உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளரும், சென்னை ரோகிணி திரையரங்க உரிமையாளருமான பன்னீர்செல்வமும் வாட்ஸ் அப் ஆடியோக்களைப் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.