தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலைநிறுத்தம்! - இனி தெலுங்குப் படங்களும் கிடையாது?

தமிழ்த் திரைப்பட உலகின் ஒன்றுபட்ட வேலை நிறுத்தத்தை ஆதரிக்கும் வகையில் தெலுங்கு படங்களைத் தமிழகத்தில் வெளியாகாது எனத் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

கியூப், யூ.எஃப்.ஓ நிறுவன கட்டணங்களுக்கு எதிராகக் கடந்த மார்ச் 16 முதலே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வேலை நிறுத்தம் நாளுக்குநாள் பலரது ஆதரவைப் பெற்றுவருகிறது. புதுத் தமிழ் படங்கள் வெளியிடுவதில்லை என்ற முடிவால், தமிழகத்திலுள்ள திரையரங்குகளில் இந்தி, தெலுங்கு, ஆங்கில, மலையாளத் திரைப்படங்களும் பழைய படங்கள் மட்டும் வெளியாகி வருகின்றன.

ரங்கஸ்தலம் உள்ளிட்ட தெலுங்கு படங்கள் டைனி இல்லை

இந்நிலையில், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் இந்த வேலைநிறுத்ததை ஆதரிக்கும் வகையில் வரும் திங்கள் முதல்  தமிழகத்தில் நேரடி தெலுங்குப் படங்கள் ரிலீஸ் செய்யப்படாது எனத் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராம் சரண், சமந்தா நடிப்பில் சென்ற வாரம் வெளியாகி ஒடிக் கொண்டிருக்கும் 'ரங்கஸ்தலம்' உள்ளிட்ட அனைத்து தெலுங்குப் படங்களும் ஞாயிற்றுக்கிழமையுடன் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. கியூப் நிறுவனத்துக்கு எதிராக இந்தப் போராட்டத்தை தமிழ் திரையுலகினருடன் ஆரம்பித்த தெலுங்கு தயாரிப்பாளர் சங்கத்தினர் பின் கியூப் நிறுவனத்துடன் சமரசம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!