ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட்ட மதுரை நந்தினி கைது!

மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தை முதன்மையாகவும்,  பல்வேறு சமூக பிரச்னைகளுக்காகவும் தமிழகம் முழுவதும் சென்று

மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டத்தை முதன்மையாகவும்,  பல்வேறு சமூக பிரச்னைகளுக்காகவும் தமிழகம் முழுவதும் சென்று போராட்டம் நடத்தி வரும்  சமூகப் போராளியான மதுரை நந்தினி இன்று சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

''ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளரான ஆடிட்டர் குருமூர்த்தி தமிழக அரசை மறைமுகமாக இயக்கி வருகிறார். அதை அவர் வெளிப்படையாக கூறி வருகிறார். இதனால்தான் தமிழகத்தில் அசாதாரணமான சூழ்நிலை உருவாகியுள்ளது. அதனால் அவருடைய மறைமுக செயல்பாட்டைக் கண்டித்து சென்னையிலுள்ள அவர் வீட்டை முற்றுகையிடப்போகிறேன்'' என்று சமூக ஊடகம் மூலம் அறிவித்திருந்தார் நந்தினி. இந்தத் தகவல் அறிந்ததும் காவல்துறை அலார்ட்டானது.

ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிட்ட நந்தினி கைது

அதன்படி இன்று காலை சென்னை வந்த நந்தினி, மயிலாப்பூரிலுள்ள ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டை முற்றுகையிடச் சென்றபோது காவல்துறையால் கைதுசெய்யப்பட்டார். அவருடன் சென்ற தந்தை ஆனந்தனும் கைது செய்யப்பட்டார். இதுசம்பந்தமாக நந்தினியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டபோது, ''தமிழக அரசை மறைமுகமாக இயக்கி வரும் ஆடிட்டர் குரு மூர்த்தி வீட்டை முற்றுகையிடச் சென்ற நந்தினியைக் கைது செய்து தற்போது மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வைத்துள்ளனர்'' என்றார் அவரது உறவினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!