வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (04/04/2018)

கடைசி தொடர்பு:13:10 (04/04/2018)

`இந்தியாவில் எச்சரிக்கையாக இருங்கள்!' - அமெரிக்கர்களுக்கு அலெர்ட் கொடுத்த தூதரகம்

`இந்தியாவில் எச்சரிக்கையாக இருங்கள்!' - அமெரிக்கர்களுக்கு அலெர்ட் கொடுத்த தூதரகம்

காவிரிக்காகத் தமிழகத்தில் போராட்டங்கள் நடைபெற்றுவருவதால், அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அமெரிக்க தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழ்நாட்டில் போராட்டங்கள் வலுவடைந்து வருகின்றன. எதிர்க்கட்சியான தி.மு.க சார்பில் தொடர்போராட்டங்களும் நாளை முழுஅடைப்புப் போராட்டமும் நடைபெறவுள்ளது. இதேபோல், நேற்று அ.தி.மு.க சார்பிலும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இதற்கிடையே, தமிழகம், கர்நாடகாவில் போராட்டங்கள் வலுவடைந்து வருவதால், அங்கிருக்கும் அமெரிக்கர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அமெரிக்கன் எம்பஸ்ஸி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இதுகுறித்து அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில், ``காவிரி நீர் தொடர்பான சமீபத்திய உச்சநீதிமன்றத் தீர்ப்பால் சில கட்சிகள் 5-ம் தேதி வரை போராட்டங்களை அறிவித்திருக்கின்றன. குறிப்பாகத் தமிழகம் - கர்நாடக எல்லையில் இதற்கான போராட்டங்கள் நடைபெறும். இதனால் தமிழகம் - கர்நாடகம் இடையே பேருந்து சேவைகள் நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. மேலும், கடைகள் அடைக்கப்பட வாய்ப்புள்ளது. மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைளை எடுத்துவருகின்றன. எனினும், போராட்டம் நடைபெறும் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம். போராட்டத்துக்கான காரணத்தை அறிந்துகொண்டு வெளியில் செல்வதைத் தவிர்க்கவும். உங்களின் பாதுகாப்புகளை உறுதி செய்துகொண்டு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நீங்க எப்படி பீல் பண்றீங்க