கோவையில் இந்தி எழுத்துகளை கிழித்தெறிந்த வழக்கறிஞர்கள்! #WeWantCMB

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, கோவையில் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்தில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் விளம்பரப் பதாகையில் இந்தி எழுத்துகளைக் கிழித்தனர்.

வழக்கறிஞர்கள் போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும், நியூட்ரினோ திட்டத்துக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கோவை வழக்கறிஞர்கள் இன்று இரண்டாவது நாளாக நீதிமன்றப் பணிகளைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர். குறிப்பாக, நீதிமன்ற வளாகத்தில் இருந்த, இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் விளம்பரப் பதாகையில் இந்தி எழுத்துகளை அவர்கள் கிழித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், நீதிமன்றத்திலிருந்து 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் ஊர்வலமாகச் சென்று, பி.எஸ்.என்.எல் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது, மத்திய அரசுக்கு எதிராக அவர்கள் கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து, வருகின்ற 7-ம் தேதி வரை தொடர்ந்து நீதிமன்றப் பணி புறக்கணிப்பு நடத்துவது என்றும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் வரை தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்துவது என்றும் கோவை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!