`இந்தியர்கள் நல்லவர்கள்; அவர்கள் பொல்லாதவர்கள்!’ - துபாய் போலீஸ் ட்வீட்டால் சர்ச்சை | Dubai cop praises Indians and bashes Pakistanis

வெளியிடப்பட்ட நேரம்: 16:00 (04/04/2018)

கடைசி தொடர்பு:16:00 (04/04/2018)

`இந்தியர்கள் நல்லவர்கள்; அவர்கள் பொல்லாதவர்கள்!’ - துபாய் போலீஸ் ட்வீட்டால் சர்ச்சை

இந்தியர்கள் ஒழுக்கமானவர்கள் அவர்கள் ஏ ன் இப்படி இருக்கிறார்கள் என்று எனக்குள் கேள்வி எழுகிறது.

ண்மையில் துபாயில் மூன்று பாகிஸ்தானியர்கள் போதை மருந்துடன் பிடிபட்டார்கள். துபாய் மக்கள் பாதுகாப்புத்துறை தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் தாகி கல்ஃபான், 'பாகிஸ்தானியர்கள் கெட்டவர்கள், கண்ணியமில்லாதவர்கள், கடத்தல்காரர்கள், கிரிமினல்கள் என்கிற விதத்தில் ட்வீட் செய்யத் தொடங்கினார். பிடிபட்ட மூவர் புகைப்படத்தையும் வெளியிட்டு தொடர்ச்சியாக அவர் பதிவிட்ட ட்வீட்கள் ''பாகிஸ்தானியர்கள் நம் நாட்டுக்குள் போதை மருந்தைக் கடத்தி வருகிறார்கள். வளைகுடாவினரின் சமூகத்துக்கு பாகிஸ்தானியர்கள் அச்சுறுத்தலாக உள்ளனர். பாகிஸ்தானியர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதில் கடுமை காட்ட வேண்டும். இந்தியர்கள் ஒழுக்கமானவர்களாக இருக்கிறார்கள். பாகிஸ்தானியர்கள்  ஏன் ஒழுக்கமில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்கிற கேள்வி எனக்குள் எழுகிறது. கடத்தல், கிரிமினல் செயல்களில் ஈடுபடுவதுதான் பாகிஸ்தானியர்களின் அடையாளமா' என்று கூறின.

துபாய் போலீஸ் ட்விட்

மேலும், ''வளைகுடா நாட்டைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானியர்களை வேலைக்கு எடுக்கும் முன் 1,000 முறை ஆலோசியுங்கள். அவர்களைப் பணிக்கு எடுக்காமல் இருப்பது இந்த நாட்டுக்கு நீங்கள் செய்யும் சேவை ஆகும்'' என்கிற பதிவையும் அவர் வெளியிட்டிருந்தார். 

துபாய் போலீஸ்துறைத் தலைவரின் இத்தகைய ட்வீட்கள் பாகிஸ்தான் பத்திரிகைகளைக் கொந்தளிக்க வைத்தது. ''தாகி கால்ஃபானுக்கு 26 லட்சம் ஃபாலோயர்கள் உள்ளனர். இதனால், அடிக்கடி இது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார்'' என்று பாகிஸ்தான் பத்திரிகைகள் கூறுகின்றன. ''அனைத்து சமூகத்திலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருப்பார்கள். அதற்காக ஒட்டுமொத்த சமூகத்தைக் குற்றம் சொல்லக் கூடாது. பல ஆண்டுகளாக இந்த நாட்டில் வாழ்ந்து வந்துள்ளோம். அமீரகத்தின் முன்னேற்றத்துக்காக உழைத்துள்ளோம். உங்களை யாரோ தவறாக வழிகாட்டுகிறார்கள்'' என்று கல்ஃபானுக்கு ட்வீட் வழியாகவும் பாகிஸ்தானியர்கள் பதில் அளித்து வருகின்றனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க