கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புற்றுநோய்க்கு அதிநவீன சிகிச்சை!

புற்றுநோய் காரணமாக உணவுக்குழாயில் ஏற்படும் அடைப்புக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவ கல்லூரியில் முதன்முறையாக ஸ்டென்னட் மூலம் நவீன சிகிச்சை அளிக்கப்பட்டது.

புற்றுநோய் காரணமாக உணவுக்குழாயில் ஏற்படும் அடைப்புக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதன்முறையாக ஸ்டென்னட் மூலம் நவீன சிகிச்சை அளிக்கப்பட்டது.

புற்றுநோய் சிகிச்சை

கல்லீரல் கணையம் பகுதியில் பிரச்னை இருந்தால் அறுவைசிகிச்சை செய்வதற்காகக் கன்னியாகுமரி மாவட்ட மக்கள் இதற்கு முன்பு மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையில் கல்லீரல், இரைப்பை, குடல், கணையம் சிறப்பு நிபுணர் பாப்பி ரிஜாயிஸ் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியமர்த்தப்பட்டார். அதன் பிறகு கல்லீரல், இரைப்பை, குடல், கணயம் நோய்களுக்கான சிகிச்சை தொடங்கப்பட்டது. இதையடுத்து வாயில் புற்றுநோய் காரணமாகத் தொண்டையில் கட்டி ஏற்பட்டதால் உமிழ்நீர் கூட முழுங்க முடியாத நிலையில் இருந்த சாத்தன்குளம் பகுதியைச் சேர்ந்த பெயின்டர் ஆறுமுகத்துக்கு உணவுக்குழாயில் ஸ்டென்னட் பொருத்தப்பட்டது. இதையடுத்து அவர் எந்தச் சிரமமும் இல்லாமல் உணவு சாப்பிட முடிகிறது.

இதுகுறித்து ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முழு பொறுப்பு டீன் ராதாகிருஷ்ணன் கூறுகையில், `உணவுக்குழாயில் புற்றுநோய் ஏற்படும்போது நீர் ஆகாரம் எடுத்துக்கொள்வதே சிரமமாக இருக்கும். இப்போது முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்திலே ஸ்டென்னட் பொருத்தி திட உணவு உண்ண வழிவகை செய்யப்படுகிறது. ஆசாரிப்பள்ளம் மெடிக்கல் காலேஜில் இதுவரை 5 பேருக்கு இந்தச் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் இந்தச் சிகிச்சைக்கு குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் செலவாகும்" என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!