வெளியிடப்பட்ட நேரம்: 19:39 (04/04/2018)

கடைசி தொடர்பு:20:26 (04/04/2018)

`காவிரிக்காகக் கண்டனப் பொதுக்கூட்டம்!’ - திருச்சி கூட்டத்தின் பெயரை மாற்றிய கமல்

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? - மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன.

`காவிரிக்காகக் கண்டனப் பொதுக்கூட்டம்!’ - திருச்சி கூட்டத்தின் பெயரை மாற்றிய கமல்

மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? - மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்’ என்ற வாசகங்கள் இடம்பெற்றுள்ளன. 

மக்கள் நீதி மய்யம்

மதுரையில், கடந்த பிப்ரவரியில் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை நடிகர் கமல்ஹாசன் தொடங்கினார். இதையடுத்து, கட்சியின் முதல் பொதுக்கூட்டம் திருச்சியில் ஏப்ரல் 4-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக சென்னையிலிருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரயிலில் கமல்ஹாசன் உள்ளிட்ட மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகள் திருச்சி வந்தனர். திருச்சியில் இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய கமல், "காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது என்பது கடந்த 2016-ம் ஆண்டு அறிவித்த தீர்ப்பைப் போல, இப்போது சில காரணங்களைச் சொல்லி தாமதிக்கப்படுகிறது. அதை ஏற்க முடியாது. மத்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டிய மாநில அரசு, எடுபிடி போன்று செயல்படுகிறது. இன்று மாலை நடக்கும் எங்கள் முதல் பொதுக்கூட்டத்தில், காவிரிப் பிரச்னைகுறித்து விவாதிக்கப்படும். அதோடு, இந்தப் பிரச்னைக்கான தீர்வை, ஆய்வின்படி கோட்பாடுகள் அறிவிக்கப்படும். மக்கள் நீதி மய்யத்தின் திட்டங்கள், ஐந்து மாதத்தில் முழுமை அடையும். மிக முக்கியமான விஷயங்கள்குறித்து மாலை பொதுக்கூட்டத்தில் பேச உள்ளேன்'' என்றார்.

மக்கள் நீதி மய்யம் பொதுக்கூட்டம்

இந்த நிலையில், திருச்சி ஜி கார்னர் பகுதியில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடையில், `காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது ஏன்? - மாபெரும் கண்டனப் பொதுக்கூட்டம்’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் முதல் பொதுக்கூட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அது மாற்றப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன், பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு மக்கள் நீதி மய்யத்தினர் ஏற்பாடுசெய்திருந்தனர். 

நீங்க எப்படி பீல் பண்றீங்க