மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத் திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நாட்டில் மனித உரிமைகளை திறம்படப் பாதுகாக்கும் வகையிலான மனித உரிமைகள் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

குழந்தைகளின்உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தைத் தன்னாட்சி ஆணையமாக மாற்றுவதற்கு இந்த மசோதா வகை செய்கிறது. இந்த ஆணையத்தில், மகளிர் உறுப்பினர்களைச் சேர்க்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

யூனியன் பிரதேசங்களில், மனித உரிமை மீறல்கள் தொடர்பான வழக்குகளை எதிர்கொள்வதற்கான வழிவகைகளும் இந்த மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மசோதாமூலம் இந்தியாவில் மனித உரிமை அமைப்புகள் தங்களின் தீர்ப்புகளை அளிப்பதற்கும், அவற்றின் பங்கு மற்றும் பொறுப்புகளுக்கு வலு சேர்க்கவும் உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனிநபர் வாழ்க்கை, சுதந்திரம், சமத்துவம் உள்ளிட்டவற்றை உறுதிசெய்யும் வகையில், உலக அளவிலான தரத்துடன் இந்த சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட உள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!