ஆட்டுக்குட்டிக்காகப் புலியோடு போராடிய இளம்பெண்!

புலியை கம்பால் அடித்து விரட்டிய இளம் பெண்

மகாராஷ்டிரத்தில், ஆசை ஆசையாக வளர்த்த ஆட்டுக்குட்டியை அடித்துச் சாப்பிட வந்த புலியை, இளம் பெண் ஒருவர் கம்பால் அடித்து விரட்டினார். 

ரத்தம் வழியும் முகத்துடன் இளம்பெண்

பண்டாரா மாவட்டத்தில், சகோலி அருகேயுள்ள உஸ்கான் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண், ரூபாலி மெஸ்ராம். இவர், தன் வீட்டில் ஆட்டுக்குட்டி ஒன்றைப் பாசமாக வளர்த்து வந்தார். ஆட்டுக்குட்டியை எப்போதும் வீட்டு வாசலில் கட்டிவைப்பது வழக்கம். வீட்டருகில் வந்த புலி ஒன்று, ஆட்டுக்குட்டியை அடித்துச் சாப்பிட முயன்றது. ஆட்டுக்குட்டி அலறும் சத்தம் கேட்டு, வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்த ரூபாலிக்கு அதிர்ச்சி.

புலியின் பிடியில் ஆட்டுக்குட்டி இருந்தது. அதன்மீது பாய்ந்த ரூபாலி, ஆட்டுக்குட்டியை மீட்க கடும் சண்டையிட்டார். கையில் கிடைத்த கம்பைக் கொண்டு  சரமாரியாகத் தாக்கினார். ரூபாலிக்கு உதவியாக அவரின் தாயாரும் வந்தார். இருவரும் கொடுத்த அடியில், ஆட்டுக்குட்டியை விட்டுவிட்டு புலி தப்பியோடியது. புலி தாக்கியதில், ரூபாலியின் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. ரத்தம் வழியும் முகத்தைப் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டார். இந்தப் புகைப்படம் வைரலாகிவருகிறது. 

ரூபாலிக்கு முகம், கை, கால்களில் கடும் சிராய்ப்பு ஏற்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த பின் குணமடைந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!