வெளியிடப்பட்ட நேரம்: 15:57 (05/04/2018)

கடைசி தொடர்பு:15:57 (05/04/2018)

`ஆதிகால மனிதனாக மாறிவிட்ட ஸ்டாலின்!' - சாடும் ஜெயக்குமார்

காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பான போராட்டத்தில் கல்லெறிச் சம்பவங்களை நிகழ்த்தி ஸ்டாலினும், தி.மு.க-வினரும் ஆதிகால மனிதர்களைப் போல் மாறிவிட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். 

ஜெயகுமார்

இன்று தமிழகம் முழுவதும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெற்ற முழு அடைப்புப் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார், ``ஜெயலலிதா இறந்த பிறகு பல முறை இந்த ஆட்சியைக் கலைக்க ஸ்டாலின் முயற்சி செய்தார். ஆனால், அவரின் அனைத்து முயற்சியும் அதிமுக அரசு தோற்கடித்துவிட்டது தற்போது, புதிதாகக் காவிரி மேலாண்மை வாரியம் என்ற விசயத்தைக் கையில் எடுத்துள்ளார். இன்று நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்தில் கல்லெறிச் சம்பவங்கள், வன்முறைகள் போன்றவற்றை அரங்கேற்றி இந்த ஆட்சியைக் கலைக்க நினைக்கிறார் ஸ்டாலின். இது போன்ற கல்லெறி சம்பவங்களால் ஸ்டாலின் மற்றும் தி,மு.க-வினர் ஆதிகால மனிதர்களாக மாறிவிட்டனர்.

மத்திய அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதது கண்டனத்துக்குரியது இது தொடர்பாக மத்திய அரசுக்குத் தொடர்ந்து தமிழக அரசு அழுத்தும் அளித்து வருகிறது. வரும் 9-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் நடைபெறவுள்ள காவிரி விவகாரம் தொடர்பான விசாரணையில் நல்ல தீர்ப்பு வரும் என நம்புகிறோம். காவிரி விவகாரம், முல்லை பெரியாறு, கட்சத் தீவு போன்ற அனைத்துமே தி.மு.க ஆட்சிக்காலத்தில் உருவானவைதான். தற்போது, அவர்கள் எதுவுமே செய்யாதது போல் நடித்து போராட்டம் நடத்துகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.