கமல்ஹாசனை பார்க்கும்போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது - ராஜேந்திர பாலாஜி | Minister Rajendra Balaji slams Kamal hassan

வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (05/04/2018)

கடைசி தொடர்பு:19:40 (05/04/2018)

கமல்ஹாசனை பார்க்கும்போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது - ராஜேந்திர பாலாஜி

இத்தனை ஆண்டுகளாக  ஸ்டெர்லைட்டை பற்றி பேசாத நடிகர் கமல்,  தற்பொழுது  போராடும் மக்களிடம் பேசுவதை பார்க்கும்போது

''இத்தனை ஆண்டுகளாக ஸ்டெர்லைட்டை பற்றி பேசாத நடிகர் கமல், தற்பொழுது போராடும் மக்களிடம் பேசுவதைப் பார்க்கும்போது வேடிக்கையாகவும் வேதனையாகவும் இருக்கிறது. கமல்ஹாசன் பேசுவது யாருக்குமே புரியாது. வசனம் எழுதிக் கொடுத்தால் பேசக்கூடியவர்'' என்று சிவகாசியில் இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பகடி செய்தார். 

கமல் ஹாசனை

மேலும், அவர் பேசும்போது, ''ஆட்சிப் பொறுப்பில் இருந்துகொண்டு, மக்களைப் பாதிக்கும் வகையில் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என்பதால், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க அறவழியில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோம். அ.தி.மு.க-வின் போராட்டத்தைக் குறை கூறுபவர்கள் கூறிக் கொண்டேதான் இருப்பார்கள்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி நடைபெறும் எதிர்க்கட்சிகளின் போராட்டத்தை வரவேற்கிறேன்.

ஆனால், போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தாமல் அ.தி.மு.க எம்.பி-க்களையும் எம்.எல்.ஏ-க்களையும் பதவி விலகச் சொல்வது, ஆட்சியைவிட்டு அகற்றுவது பற்றியே வலியுறுத்தி வருகிறார்கள். எத்தனை முறை தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க-தான் வெற்றிபெறும், மற்றவர்கள் அனைவரும் ஜீரோதான். காவிரி விவகாரத்தில் கூடிய விரைவில் நல்ல செய்தி வரும். சாலை மறியல், ரயில் மறியல் கடையடைப்பு என மக்களைத் துன்புறுத்தும் போராட்டங்களை தி.மு.க முன்னெடுத்து வருகிறது. தி.மு.க நினைத்திருந்தால் முன்பே காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திருக்கலாம். தும்பை விட்டு, வாலை பிடிக்கும் விதமாகத் தி.மு.க-வினர் போராட்டம் என்ற பெயரில் மக்களை ஏமாற்றி நாடகம் நடத்தி வருகின்றனர்'' என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க