வெளியிடப்பட்ட நேரம்: 20:31 (05/04/2018)

கடைசி தொடர்பு:20:31 (05/04/2018)

அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தராக எம்.கே.சூரப்பா நியமனம்!

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பாவை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக எம்.கே.சூரப்பாவை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டார். 

எம்.கே.சூரப்பா

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருந்தது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் முக்கியமான பல்கலைக்கழகத்துக்குத் துணைவேந்தர் நியமனம் செய்யப்படாமல் இருப்பதற்கு கல்வியாளர்கள் தரப்பில் அதிருப்தியும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டு வந்தது. 

இந்தநிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தின் பேராசிரியர் சூரப்பாவை நியமித்து ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உத்தரவிட்டுள்ளார். நாட்டின் முதன்மையான பல்கலைக்கழகமாக மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையால் அறிவிக்கப்பட்ட பெங்களூரு இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் கல்வி நிறுவனத்தில் கடந்த 24 ஆண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றி வருபவர் சூரப்பா. அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பதவி வகிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழகத்தின் முக்கியமான கல்வி நிறுவனமான அண்ணா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக வேறு மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமிக்க பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.