சர்ச்சைக்குரிய சுவர் இடிக்கும்பணி தொடங்கியது! முடிவுக்கு வந்தது சந்தையூர் மக்கள் போராட்டம்

சந்தையூர் அருந்ததியின மக்கள் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் வகையில்

சந்தையூர் அருந்ததியின மக்கள் தொடர்ந்து நடத்திக்கொண்டிருந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களின் போராட்டத்தைத் திரும்பப் பெற வைத்துள்ளார் மதுரை கலெக்டர் வீரராகவ ராவ்.

மதுரை மாவட்டம் பேரையூர் அருகே சந்தையூர் இந்திரா நகரில் கட்டப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய சுவரை அகற்ற வேண்டுமென்றும் அந்தப் பகுதி மக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்ததுடன், அப்பகுதியிலிருந்து வெளியேறி அருகிலுள்ள மலையில் குடியேறி போராட்டம் நடத்தி வந்தார்கள். சமீபத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பழனி முருகன் என்பவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. இப்பிரச்னைக்குத் தீர்வு கிடைக்காமல் உடலை வாங்க மாட்டோம் என்று போராடி வந்தனர்.

சந்தையூர் மக்களின்

 
`அது தீண்டாமைச் சுவரல்ல, எங்கள் கோயிலின் சுற்றுச்சுவர்' என்று அதே உட்பிரிவைச் சார்ந்த சமூக மக்கள் தெரிவித்து வந்த நிலையில், இரண்டு தரப்பும் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் ஒத்துவராமல் இருந்தது. இந்த விவகராம் நீடித்துக்கொண்டிருந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக மதுரை கலெக்டர் இரண்டு தரப்பினரிடமும் தொடர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், ஓரளவு முடிவு எட்டப்பட்டது. அதன்படி, சர்ச்சைக்குரிய சுவரில் கிழக்கு, மேற்குப் பகுதிகளில் ஆறடி நீளத்துக்கு சுவரை உடைப்பது, அதற்குள் உள்ள நிலத்தில் இரண்டு தரப்பினரும் பயன்பெறும் வகையில் அங்கன்வாடி கட்டடம் கட்டுவது, அங்குள்ள கோயிலில் இரு தரப்பும் வழிபாடு செய்துகொள்வது என்றும் கலெக்டர் கூறியதை இரண்டு தரப்பும் ஏற்றுக்கொண்டார்கள். அதைத்தொடர்ந்து, போராட்டத்தை முடித்துக்கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கி வருவதாகக் கூறியவர்கள், பிணவறையில் இருக்கும் பழனிமுருகனின் உடலை வாங்கிக்கொள்வதாகவும் கூறியுள்ளனர். இதன் மூலம் சந்தையூர் போராட்டம் முடிவுக்கு வருவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, பலத்த பாதுகாப்புடன் சர்ச்சைக்குரிய சுவர் இடிக்கும்பணி இன்று காலை தொடங்கியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!