வெளியிடப்பட்ட நேரம்: 11:21 (06/04/2018)

கடைசி தொடர்பு:11:25 (06/04/2018)

தூத்துக்குடி கலெக்டருக்குக் கொலைமிரட்டல்! - ஜோயல் மீது 7 பிரிவுகளில் வழக்கு #Sterlite

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்களத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷை ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தி.மு.க., மாநில இளைஞரணி துனைச் செயலாளர் மற்றும் ஆதரவாளர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்களத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷை ஒருமையில் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக  தி.மு.க-வின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் மற்றும் ஆதரவாளர்கள்மீது 7 பிரிவுகளின்கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. 

kumarediyapuram

ஸ்டெர்லைட் ஆலையை மூடிட வலியுறுத்தி அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 54 வது நாளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக மாணவர்கள், வழக்கறிஞர்கள், சமூக அமைப்புகளும் போர்க்கொடி தூக்கி வருகின்றனர். பல அரசியல்கட்சி தலைவர்களும் இக் கிராமத்துக்கு நேரடியாகச் சென்று தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 4-ம் தேதி, தி.மு.க, இளைஞரணி மாநில துணைச் செயலாளர் ஜோயல் மற்றும் திருச்செந்தூர் தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோரும் நேரில் சென்று ஆதரவளித்துப் பேசினர். 

அப்போது , ஸ்டெர்லைட் ஆலையை மூடிட தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் நடவடிக்கை எடுக்காமல் சாதகமாகவே செயல்பட்டு வருகிறார். இந்த நிலை தொடர்ந்தால் திரண்டு சென்று ஆட்சியர் அலுவலகத்தைத் தகர்க்க நேரிடும். வேதாந்தாவுக்கு ஆதரவாகச் செயல்படும் ஆட்சியர் அவரின் குடும்பத்துடன் தூத்துக்குடியிலிருந்து வெளியேற வேண்டும் என ஒருமையில் பேசியதாகத் தெற்கு வீரபாண்டியபுரம் வி.ஏ.ஓ மாரிமுத்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது குறித்து சிப்காட் போலீஸார் விசாரணை செய்து ஜோயல் மற்றும் அவரின் ஆதரவாளர்கள்மீது இ.பி.கோ 143, 147, 188, 294(சி), 353, 506 (2) மற்றும் 7(1) சி.எல்.ஏ சட்டம் ஆகிய 7 பிரிவுகளின்கீழ், அரசு சட்டவிதிமுறைகளை  மீறுதல், சட்டவிரோதமாகக் கூடுதல், சட்டத்துக்கு புறம்பாகப் பேசுதல், அரசு அதிகாரியைப் பணி செய்யவிடாமல் தடுத்தல், அவதூறாகத் தகாத வார்த்தைகளால் பேசுதல், கொலை மிரட்டல் விடுத்து கலகத்தை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டதாகக் கூறி வழக்கு பதிவுசெய்துள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர்.

 கடந்த 4-ம் தேதி மாலை தூத்துக்குடியில் நடைபெற்ற ஸ்டெர்லைட் எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஜோயல், மாவட்ட ஆட்சியரை தாக்கியே பேசினார்.

ஜோயல்

இதுகுறித்து ஜோயலிடம் பேசினோம்.  " ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் பல லட்சம் மக்கள் திரண்டு போராடிக் கொண்டிருக்கிறார்கள். 'ஸ்டெர்லைட் ஆலைக்குத் தண்ணீர் கொடுக்கக் கூடாது' என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால், இன்னமும் தொடர்ந்து தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனர். ஆலையை மூடுவதற்குக் கலெக்டர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே ஸ்டெர்லைட் ஆலையை அடித்து நொறுக்கும்போது கலெக்டரையும் விரட்டி அடிப்போம் என்று சொன்னேன்’ என்றார் இயல்பாக.

நீங்க எப்படி பீல் பண்றீங்க