விக்னேஷ்வரனிடம் முக்கிய கோரிக்கை வைத்த கருணாஸ்! | Actor Karunas has requested Sri Lanka to protest for cauvery

வெளியிடப்பட்ட நேரம்: 15:09 (06/04/2018)

கடைசி தொடர்பு:15:09 (06/04/2018)

விக்னேஷ்வரனிடம் முக்கிய கோரிக்கை வைத்த கருணாஸ்!

 தமிழக மக்களுக்கு  ஆதரவாக இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் இலங்கையில் அறப்போராட்டம் நடத்த வேண்டும்  நடிகர் கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 'தமிழக மக்களுக்கு  ஆதரவாக இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன், இலங்கையில் அறப்போராட்டம் நடத்த வேண்டும்'  என நடிகர் கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் வடக்கும் மாகாண முதல்வரை சந்தித்த கருணாஸ்

உலகத்  தமிழர்களின் ஒட்டுமொத்த கருத்தாகவும், கோரிக்கையாகவும் காவிரி மேலாண்மை அமைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் கடந்த 10 நாள்களாக பல்வேறு போராட்டங்கள் நடந்துவருகின்றன. இந்நிலையில், 'தமிழக மக்களின் இந்த நியாயமான கோரிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில், இலங்கையில் அறப்போராட்டம் நடத்த, வடக்கு மாகாண முதல்வர் சி.விக்னேஷ்வரன் முன்வர வேண்டும்' என நடிகரும், தமிழக சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடிகர் கருணாஸ், யாழ்ப்பாணத்தில் வடக்கு மாகாண முதல்வர விக்னேஷ்வரனைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டம் மற்றும் ஆந்திராவில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றிற்கு ஆதரவு தெரிவித்து, இலங்கையில் தமிழர்கள் போராட்டம் நடத்தினர். இதேபோன்று, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் இலங்கையில் அறப்போராட்டம் நடத்த கோரிக்கை விடுத்துள்ளதாகவும், தமிழகத்தில் இருக்கும்  ஈழ மக்களுக்கு கல்வி மிகப்பெரிய பிரச்னையாக  உள்ளது. எனவே, அவற்றை கருத்தில்கொண்டு, தான் கட்ட உள்ள கல்லூரிக்கு அடிக்கல் நாட்ட  வருமாறு  வடக்கு மாகாண முதல்வர் சி.விக்னேஷ்வரனுக்கு அழைப்பு கொடுப்பதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்ததாகவும்' நடிகர் கருணாஸ் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, கிளிநொச்சியில் நடைபெற்றுவரும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நடத்திவரும் போராட்டக் களத்திற்குச் சென்று, அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்களையும் சந்திக்க உள்ளாராம்.