வெளியிடப்பட்ட நேரம்: 15:32 (06/04/2018)

கடைசி தொடர்பு:15:35 (06/04/2018)

44 வார கடினப் பயிற்சி... சென்னையில் தயாரான 1,313 சி.ஆர்.பி.எஃப் வீர்ர்கள்!

சிஆர்பிஎஃப்

மத்திய ரிசர்வ் காவல்படையின் 1,313 வீரர்களின் பயிற்சி நிறைவு மற்றும் சத்தியப் பிரமாணம் எடுக்கு விழா, ஆவடி ரிசர்வ் படை மைதானத்தில்  நடைபெற்றது.

சென்னை ஆவடியில் அமைந்துள்ள மத்திய ரிசர்வ் காவல்படையின் மைதானத்தில்  நடைபெற்ற நிகழ்ச்சியில்,  பயிற்சி நிறைவு மற்றும் சத்தியப் பிரமாணம் எடுக்கும் விழா இன்று நடைபெற்றது. இந்தப் பிரிவில், 44 வார கடினப் பயிற்சி சுமார் 1,313 வீரர்களுக்கு வழங்கப்பட்டது. இதில் உடற்பயிற்சி, அணிவகுப்பு, எல்லா விதமான நவீன ஆயுதங்கள் கையாளும் பயிற்சி, குண்டு எறியும் பயிற்சி, துப்பாக்கியுடன்கூடிய குண்டெறியும் பயிற்சி, நக்சலைட் மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளை முறியடிக்கும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டன.

சிஆர்பிஎஃப்

மேலும், காடுகளில் தீவிரவாதிகளை எதிர்கொள்ளும்விதமாக, 7 நாள்கள் உணவுடன்கூடிய, காடுகளில் தங்கும் பயிற்சியும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், சிஆர்பிஎஃப்  ஏடிஜிபி வஸ்தவா அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, சிறப்பாகப் பயிற்சி முடித்த ஒன்பது வீரர்களுக்குப் பரிசு வழங்கினார். நிகழ்ச்சியில், பிரவீன் சந்திரகாந்த் டிஐஜி கலந்துகொண்டார். பயிற்சி முடித்த வீரர்கள் ,நாட்டின் பல்வேறு பகுதிகளில் தீவிரவந்த் தடுப்பு, உள்நாட்டுப் பாதுகாப்பு போன்ற பணிகளில் ஈடுபட உள்ளனர். வீரர்களின் அணிவகுப்பு நிகழ்ச்சியைப் பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கண்டுகளித்தனர்.