ஏப்ரல் ஃபூல் அல்ல; ஏப்ரல் கூல்... அசத்திய அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள்

இளைஞர்கள் அதை சமூக நோக்கத்தோடு ஒவ்வொரு நல்ல முறையில் மாற்றிவருகின்றனர்

ஏப்ரல் பூல் அன்று மரக்கன்றுகள் நட்ட முன்னாள் மாணவர்கள்

ஏப்ரல் 1-ம் தேதியை 'முட்டாள்கள் தினம்' என்று கூறி ஏமாற்றுவதும், கேலி, கிண்டல் செய்து விளையாடுவதும் ஆண்டுதோறும் தொடரும் வழக்கம். ஆனால், மாற்றுச் சிந்தனையில் யோசிக்கும் இளைஞர்கள், அதை சமூக நோக்கத்தோடு நல்ல முறையில் மாற்றி வருகின்றனர். இதுபோன்ற விஷயங்கள் முகநூல்களில் அதிக அளவு பார்க்க முடிகிறது. இப்படித்தான் முன்னாள் மாணவர்கள் சிலர் ஏப்ரல் ஃபூலை ஏப்ரல் கூல் என  மாற்றி உச்சரித்தும், பதிவுசெய்தும் மரக்கன்றுகளை நட்டுவருகின்றனர். ஏப்ரல் 1-ம் தேதி, செடிகளை நட்டுத் தண்ணீர் ஊற்றி வளர்க்கும் சமூகப் பணியை அலங்காநல்லூர் அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள் செய்துவருகின்றனர்.

ஏப்ரல் கூல் விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற சமூக ஆர்வலர் ராஜேஸ், ஏப்ரல் 1-ம் தேதி, ஏப்ரல் கூல் என்ற வாசகத்துடன்  அலங்காநல்லூர் பகுதியில், மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் பணியில் முன்னாள் மாணவர்கள் பணியின் தொடக்க விழாவில் பங்கேற்றது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. செடிகளையும் மரக்கன்றுகளையும் அலங்காநல்லூர் காவல்நிலையத்தின் வெளியேயும் சுற்றுப் பகுதியிலும் நட்டோம். அதற்கு, ஏப்ரல் கூல் வாழ்த்துகளைச் சொல்லிவருகின்றனர். மரக்கன்றுகளை நடுவதோடு வேலை முடிந்தது என்று விட்டுவிடாமல், தொடர்ந்து தண்ணீர் ஊற்றியும், கம்பிவலை போட்டு பாதுகாத்தும்வருகின்றனர். அனைவரும் இந்த ஏப்ரலில் ஃபூல் செய்யாமல் கூல் செய்யுங்கள். அடுத்தகட்டமாக முடுவார்பட்டியில் மரக்கன்றுகள் நட்டு பொதுமக்களுக்கு வாழ்த்துகள் தெரிவிக்க உள்ளோம்'' என்று தெரிவித்தார் .

Do you like the story?

Please Appreciate the Author by clapping!