வெளியிடப்பட்ட நேரம்: 02:08 (07/04/2018)

கடைசி தொடர்பு:09:14 (07/04/2018)

முதியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்..!

கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 226 பயனாளிகளுக்கு ரூ.2.71 கோடி மதிப்பில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணையினையும்,,காவல்துறையில் பணிபுரிந்த இறந்த காவலர்களின் வாரிசுதாரர்களுக்கு வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலர்களாக கருணை அடிப்படையிலான பணிநியமன ஆணையினையும் மற்றும் ஒரு பயனாளிக்கு முன்னாள் படைவீரர் நலநிதியாக ரூ.1,00,000 தொகையினையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் தலைமையில் வழங்கினார்.

இந்திரா காந்தி தேசிய முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 69 கரூர் வட்ட பயனாளிகளுக்கும், 56 மண்மங்கலம் வட்ட பயனாளிகளுக்கு ரூ.1,50,000 மதிப்பிலும், இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகை திட்டத்தின் கீழ் 4 கரூர் வட்ட பயனாளிகளுக்கும், 15 மண்மங்கலம் வட்டம் பயனாளிகளுக்கும் ரூ.22,80,000 மதிப்பிலும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை திட்டத்தின் கீழ், 19 கரூர் வட்ட பயனாளிகளுக்கும், 15 மண்மங்கலம் வட்டம் பயனாளிகளுக்கும் ரூ.43,20,000 மதிப்பிலும், விதவை உதவித்தொகை திட்டத்தின் கீழ் 21 கரூர் வட்டம் பயனாளிகளுக்கும், 06 மண்மங்கலம் வட்டம் பயனாளிகளுக்கும் ரூ.32,40,000 மதிப்பிலும், இலங்கை அகதிகள் முதியோர் உதவித்தொகை திட்டத்தின் கீழ், 15 கரூர் வட்டம் பயனாளிகளுக்கு ரூ.18,00,000 மதிப்பிலும், முதிர்கன்னி உதவித்தொகை திட்டத்தின் கீழ் 1 மண்மங்கலம் வட்டம் பயனாளிக்கு ரூ.1,20,000 மதிப்பிலும், கணவனால் கைவிடப்பட்டவர் உதவித்தொகை திட்டத்தின் கீழ் 3 மண்மங்கலம் பயனாளிகளுக்கு ரூ.3,60,000 மதிப்பிலும் என மொத்தம் 128 கரூர் வட்டம் பயனாளிகளுக்கும், 98 மண்மங்கலம் வட்டம் பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 226 பயனாளிகளுக்கு ரூ.2.71 கோடி மதிப்பில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது. 

இந்நிகழ்ச்சியில்,போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது, `அனைத்து மாநிலங்களிலும் முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ வேண்டுமென அரும்பாடுபட்ட அம்மா, அரசின் உதவிகளைப் பெறாத மக்களே இல்லாத நிலையை உருவாக்கினார்கள். அவர்கள் பணியினைத்தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் குடும்பத்தில் பெண்களின் நிலை உயர்ந்தால் நாட்டின் நிலை உயரும் என்பதை கருத்தில் கொண்டு திருமண நிதியுதவி, தாலிக்கு அரை பவுன் தங்கம் வழங்கியதை உயர்த்தி, 1 பவுன் வழங்கும் திட்டம், மடிகணினி உள்ளிட்ட 14 வகையான திட்டங்களை செயல்படுத்தியுள்ளார்கள். 2.71 கோடி ரூபாய் மதிப்பில் 226 நபர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 28,343 பயனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டுள்ளது" என்றார்.