வறட்சி மாவட்டமாக அறிவித்தால் மட்டுமே மானிய விலையில் தீவனம்..! கால்நடைத்துறை இயக்குநர் விளக்கம்

சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்தால் மட்டுமே கால்நடைகளுக்குத் தீவனம் மானிய விலையில் வழங்கப்படும் எனக் கால்நடைகள் துறை இணை இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.

Cattle joint director

சிவகங்கை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்தால் மட்டுமே 2 லட்சத்து 24 ஆயிரம் மாடுகளுக்கும், 2 லட்சத்து 96 ஆயிரம் ஆடுகளுக்கும் தீவனங்கள் மானியவிலையில் வழங்கப்படும் என்று கால்நடைத்துறை இணை இயக்குநர் கருணாகரன் தெரிவித்தார். சிவகங்கை மாவட்டத்தில் 7 மருந்தகங்களில் 6 மருந்தகத்துக்கு நபார்டு நிதி உதவியோடு ஒரு கால்நடை மருந்தகம் ரூபாய் 31.50 லட்சம் செலவில் 6 மருந்தகங்கள் கட்டப்பட உள்ளன.

கோடைக்காலத்தில் கால்நடைகளுக்கு நோய் பாதிப்பு ஏற்படாமல் தடுப்பு மருந்துகள் அனைத்துக் கால்நடைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. வெள்ளியன்று சிவகங்கை ஊராட்சி ஒன்றியம் கீழக்கண்டனியிலும் மானாமதுரை ஒன்றியம் கரிசல்குளம் கிராமத்திலும் கால்நடை மருந்தகக் கட்டடம் திறக்கப்பட்டது. கீழக்கண்டனியில் காதித்துறை அமைச்சர் பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் லதா ஆகியோர் தலைமைவகித்து மருந்தகத்தை திறந்துவைத்தார்கள். கரிசல்குளத்தில் அமைச்சர் பாஸ்கரன் திறந்துவைத்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!