வெளியிடப்பட்ட நேரம்: 06:22 (07/04/2018)

கடைசி தொடர்பு:07:35 (07/04/2018)

காவிரி உரிமை மீட்புப் பயணம்..! கருணாநிதியிடம் வாழ்த்து பெற்ற மு.க.ஸ்டாலின்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி இன்று தொடங்க உள்ள காவிரி உரிமை மீட்புப் பயணத்துக்கு முன்னதாக, கருணாநிதியிடம் மு.க.ஸ்டாலின் ஆசி பெற்றார். 

உச்ச நீதிமன்றம் அளித்த காலக்கெடுவுக்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், தி.மு.க உள்ளிட்ட அதன் ஆதரவு கட்சிகள் ஒன்றிணைந்து, திருச்சியிலிருந்து காவிரி மீட்புப் பயணம் மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி மாவட்டம் முக்கொம்பிலிருந்து இன்று ஒரு பயணமும், வரும் 9-ம் தேதி, அரியலூர் மாவட்டத்திலிருந்து இன்னொரு பயணமும் புறப்படும். இதில், அனைத்துக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கருணாநிதியிடம் மு.க.ஸ்டாலின், காவிரி மீட்புப் பயணம்குறித்த விவரங்களை எடுத்துக் கூறி வாழ்த்து பெற்றார்.