மக்கள் மேம்பாட்டுக்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த பிரதமர் மோடி அறிவுரை!

மோடி உரை

 'இந்தியாவில் உள்ள சாமான்ய மக்களை மேம்படுத்துவதற்கு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்' என்று பி.ஜே.பி நிர்வாகிகளைக் கேட்டுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, இதற்காக மத்திய அரசு தனியான இணைய தளத்தைத் தொடங்கியுள்ளது என்றார்.

பி.ஜே.பி உருவாகி 38-வது ஆண்டு தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நாடு முழுவதும் 734 மாவட்டங்களில் உள்ள பி.ஜே.பி நிர்வாகிகளுடன்  'நரேந்திர மோடி செயலி'-யில், வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் பிரதமர் உரையாற்றினார். பி.ஜே.பி-யின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்காகப் பாடுபட்ட ஏராளமான தொண்டர்களை இந்த நேரத்தில் நினைவுகூர்வதாகவும், மக்கள் மேம்பாட்டுக்காக பி.ஜே.பி சிறந்த சேவையாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தேர்தல் வெற்றிக்கு வாக்குச்சாவடி நிர்வாகிகளின் பணி அளப்பரியது என்று பாராட்டியவர், தேசிய ஜனநாயகக் கூட்டணியைப் பொறுத்தவரை தொடர்வெற்றி பெறும் அணியாகவும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தொடர் பொய் சொல்லும் கூட்டணியாகவும் திகழ்கிறது என்றும் மோடி குறிப்பிட்டார். 

நாடு முழுவதும் பி.ஜே.பி-யின் வெற்றிக்காக அயராது பாடுபட்டுக்கொண்டிருக்கும் தொண்டர்களின் சேவையைப் பாராட்டுவதாகவும் மோடி கூறினார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!