Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கன்னியாகுமரி வர்த்தகத் துறைமுகத்துக்கு எதிராகக் கடல் முற்றுகைப் போராட்டம்!

கன்னியாகுமரி வர்த்தகத் துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் கடல் முற்றுகைப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கீழ மணக்குடி முதல் கோவளம் வரை உள்ள பகுதியில் சரக்குப் பெட்டக மாற்று முனையம் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. வர்த்தகத் துறைமுகத்தால் மீனவர்களுக்கும் விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படும் என அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அதன் ஒருபகுதியாகக் கோவளம் பகுதியில் மீனவர்கள் இன்று கடல் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நூற்றுக்கணக்கான படகுகளில் கறுப்புக்கொடிகளைக் கட்டியபடி மீனவர்கள் கோவளம் கடற்கரை பகுதியில் திரண்டுள்ளனர். மேலும், மீனவர்கள் கடற்கரை மணற்பரப்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நீரோடி முதல் ஆரோக்கியபுரம் வரையிலான கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த சுமார் ஒன்றரை லட்சம் மீனவர்கள் மீன்பிடிக்கப்போகாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் .இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 போராட்டம்

துறைமுக எதிர்ப்பாளர்கள் இன்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தனர். ஆனால், பா.ஜ.க-வினர் துறைமுகத்துக்கு ஆதரவாக இன்று பந்த் போராட்டம் அறிவித்திருந்தனர். இதனால் துறைமுக எதிர்ப்புப் போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

விகடன் பிரஸ்மீட்: அஜித்திடம் என்ன பிடிக்காது? விஜய்யிடம் என்ன பிடிக்கும்? - விஷால்
Advertisement

MUST READ

Advertisement